Versions
TOV நான் அமர்ந்திருந்து பயிரின்மேல் காயும் காந்தியுள்ள வெயிலைப்போலவும், அறுப்புக்காலத்து உஷ்ணத்தில் உண்டாகும் பனிமேகத்தைப்போலவும், என் வாசஸ்தலத்திலிருந்து கண்ணோக்குவேன் என்று கர்த்தர் என்னுடனே சொன்னார்.
IRVTA நான் அமர்ந்திருந்து பயிரின்மேல் விழும் சூடான வெயிலைப்போலவும், அறுப்புக்காலத்து வெப்பத்தில் உண்டாகும் பனிமேகத்தைப்போலவும், என் இருப்பிடத்திலிருந்து கண்ணோக்குவேன் என்று யெகோவா என்னுடனே சொன்னார்.
ERVTA கர்த்தர் என்னிடம், "நான் எனக்காகத் தயார் செய்யப்பட்ட இடத்தில் இருப்பேன். நான் நிகழ்பவற்றை அமைதியாகக் கவனிப்பேன்.
RCTA ஏனெனில் ஆண்டவர் என்னிடம் இவ்வாறு சொன்னார்: "பட்டப்பகலின் வெப்பம் போலும் அறுவடைக்கால வெயிலில் படரும் பனி மேகம் போலும், நம் இருப்பிடத்தில் இருந்து கொண்டே நாம் கலக்கமின்றிக் கவனித்துப் பார்ப்போம்."
ECTA ஏனெனில், ஆண்டவர் என்னிடம் இவ்வாறு சொன்னார்; "பகலில் அடிக்கும் வெப்பம் குறைந்த வெயில் போலும், அறுவடைக்கால வெயிலால் உண்டாகும் பனிமேகம் போன்றும் என் இருப்பிடத்தில் அமைதியாய் இருந்து நான் கவனித்துப் பார்ப்பேன் "