Bible Versions
Bible Books

Judges 16:24 (LXXRP) Septugine Greek Old Testament with Grammar and Strong Code

Versions

TOV   ஜனங்கள் அவனைக் கண்டவுடனே: நம்முடைய தேசத்தைப் பாழாக்கி, நம்மில் அநேகரைக் கொன்றுபோட்ட நம்முடைய பகைஞனை நம்முடைய தேவன் நமது கையில் ஒப்புக்கொடுத்தார் என்று சொல்லி, தங்கள் தேவனைப் புகழ்ந்தார்கள்.
IRVTA   மக்கள் அவனைப் பார்த்தவுடனே: நம்முடைய தேசத்தைப் பாழாக்கி, நம்மில் அநேகரைக் கொன்றுபோட்ட நம்முடைய எதிரியை நம்முடைய தேவன் நமது கையில் ஒப்புக்கொடுத்தார் என்று சொல்லி, தங்களுடைய தேவனைப் புகழ்ந்தார்கள்.
ERVTA   பெலிஸ்தியர் சிம்சோனைக் காணும்பொழுது, அவர்கள் தம் பொய்த் தெய்வத்தை வாழ்த்தினார்கள். அவர்கள், "இம்மனிதன் நம் ஜனங்களை அழித்தான்! இம்மனிதன் நம் ஜனங்களில் பலரைக் கொன்றான்! ஆனால் நமது தெய்வம் நம் பகைவனை வெல்ல உதவினார்!" என்றார்கள்.
RCTA   இதைக் கண்ட மக்களும், "நம் நாட்டை அழித்து நம்மில் பலரைக் கொன்ற நம் எதிரியை நம் தெய்வம் நம் கைகளில் ஒப்படைத்தார்" என்று அத்தெய்வத்தை வாழ்த்திப் போற்றினர்.
ECTA   மக்கள் அவரைப் பார்த்ததும் தங்கள் தெய்வத்தைப் புகழ்ந்தனர். "நம் கடவுள் நம் எதிரி சிம்சோனை நம் கையில் ஒப்புவித்தார். அவன் நம் விளைநிலங்களை அழித்தவன்; நம்மில் பலரைக் கொன்றவன்; என்றனர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us