Versions
TOV அப்பொழுது அவளுடைய மாமி: இன்று எங்கே கதிர்பொறுக்கினாய், எவ்விடத்தில் வேலைசெய்தாய் என்று அவளிடத்தில் கேட்டு; உன்னை விசாரித்தவன் ஆசீர்வதிக்கப்படுவானாக என்றாள்; அப்பொழுது அவள் இன்னாரிடத்திலே வேலைசெய்தேன் என்று தன் மாமிக்கு அறிவித்து: நான் இன்று வேலைசெய்த வயல்காரன் பேர் போவாஸ் என்றாள்.
IRVTA அப்பொழுது அவளுடைய மாமியார்: இன்று எங்கே கதிர்பொறுக்கினாய், எந்த இடத்தில் வேலைசெய்தாய் என்று அவளிடம் கேட்டு; உன்னை விசாரித்தவன் ஆசீர்வதிக்கப்படுவானாக என்றாள்; அப்பொழுது அவள் இன்னாரிடத்திலே வேலைசெய்தேன் என்று தன் மாமியாருக்கு அறிவித்து: நான் இன்று வேலைசெய்த வயல்காரனுடைய பெயர் போவாஸ் என்றாள்.
ERVTA அவளது மாமியாரோ அவளிடம், "நீ இந்த தானியத்தை எங்கே சேகரித்தாய்? எங்கே வேலை செய்தாய்? உன்னை விசாரித்தவன் ஆசீர்வதிக்கப்படுவான்" என்றாள். ரூத் அவளிம் தான் யாரோடு வேலை செய்தாள் என்பதைக் கூறினாள். அவள், "இன்றைக்கு நான் வேலைசெய்த வயல்காரனின் பெயர் போவாஸ்" என்றாள். நகோமி தன் மருமகளிடம், "கர்த்தர் அவனை ஆசீர்வதிக்கட்டும்! உயிருடன் இருப்பவர்களுக்கும், மரித்துப்போனவர்களுக்கும் தொடர்ந்து தன் கருணையை அவரே காட்டிவருகிறார்" என்றாள்.
RCTA அப்பொழுது அவளுடைய மாமி, "இன்று நீ எங்கே கதிர் பொறுக்கினாய்? எங்கு வேலை செய்தாய்? உன்மேல் தயவு காட்டினவன் ஆசிர்வதிக்கப்பட்டவனே" என்று சொன்னாள். அவளோ, தான் யாரிடத்தில் வேலை செய்தாள் என்றும், அம்மனிதனுடைய பெயர் போசு என்றும் அவளுக்கு சொன்னாள்.
ECTA அவர்தம் மாமியார் அவரிடம், "இன்று எந்த வயலில் கதிர் பொறுக்கினாய்? அது யாருடைய வயல்?" என்று கேட்டுவிட்டு, "உனக்குப் பரிவு காட்டியவருக்கு ஆண்டவர் ஆசி வழங்குவாராக! என்றார். ரூத்து தம் யாரிடமும் தாம் கதிர் பொறுக்கின வயல் இன்னாருடையது என்பதைத் தெரிவிப்பதற்காக, "நான் இன்று கதிர் பொறுக்கின வயலின் உரிமையாளர் போவாசு என்றார்.