Versions
TOV உன் பகைஞர் எல்லாரும் உன்பேரில் தங்கள் வாயைத் திறக்கிறார்கள்; ஈசற்போட்டுப் பற்கடிக்கிறார்கள்; அதை விழுங்கினோம், நாம் காத்திருந்த நாள் இதுவே, இப்பொழுது நமக்குக் கிடைத்தது, அதைக் கண்டோம் என்கிறார்கள்.
IRVTA உன்னுடைய பகைவர்கள் எல்லோரும் உன்னைப்பார்த்துத் தங்கள் வாயைத் திறக்கிறார்கள்;
பரியாசம் செய்து பல்லைக் கடிக்கிறார்கள்;
அதை விழுங்கினோம், நாம் காத்திருந்த நாள் இதுவே,
இப்பொழுது நமக்குக் கிடைத்தது, அதைக் கண்டோம் என்கிறார்கள்.
ERVTA உனது எல்லா பகைவர்களும் உன்னைப் பார்த்து நகைப்பார்கள். அவர்கள் உன்னைப் பார்த்து பிரமித்து தம் பற்களைக் கடிக்கிறார்கள். அவர்கள், "நாங்கள் அவர்களை விழுங்கியிருக்கிறோம்! நாங்கள் உண்மையிலேயே இந்த நாளுக்காகவே நம்பிக்கொண்டிருந்தோம். நாங்கள் இறுதியாக இது நிகழ்வதைப் பார்த்திருக்கிறோம்" என்பார்கள்.
RCTA பே: பகைவரெல்லாம் உனக்கெதிராய் வாய்திறந்து பற்களை நற நறவெனக் கடித்தார்கள்; "நாமதனை விழுங்கிடுவோம், நாம் காத்திருந்த நாளும் இதோ வந்திட்டது, அதனைக் கண்டடைந்தோம், கண்களால் பார்த்தோம்" என்றார்கள்; சீழ்க்கையடித்துப் பரிகாசம் செய்திட்டார்கள்.
ECTA உன் எதிரிகள் அனைவரும் உன்னை நோக்கிக் கோணல்வாய் காட்டுகின்றனர்; சீழ்க்கையடித்துப் பற்களை நறநற வென்று கடிக்கின்றனர்; "நாம் அவளைப் பாழாக்கினோம்" என்றனர். "இந்நாளுக்காகவே நாம் காத்திருந்தோம்; இப்போதுதான் நம்மால் அதைக் காணமுடிந்தது" என்றனர்.