Versions
TOV ஆண்டவர் தப்பவிடாமல் யாக்கோபின் வாசஸ்தலங்களையெல்லாம் விழுங்கினார்; அவர் யூதா குமாரத்தியின் அரண்களையெல்லாம் தமது சினத்திலே இடித்து, தரையோடே தரையாக்கிப்போட்டார்; ராஜ்யத்தையும் அதின் பிரபுக்களையும் பரிசுத்தக்குலைச்சலாக்கினார்.
IRVTA ஆண்டவர் தப்பவிடாமல் யாக்கோபின் குடியிருப்புகளையெல்லாம் விழுங்கினார்;
அவர், மகளாகிய யூதாவின் பாதுகாப்புகளையெல்லாம் தமது கோபத்திலே இடித்து,
தரையோடே தரையாக்கிப்போட்டார்;
இராஜ்ஜியத்தையும் அதின் தலைவர்களையும் பரிசுத்தக்குலைச்சலாக்கினார்.
ERVTA கர்த்தர் யாக்கோபின் வீடுகளை அழித்தார். அவர் அவற்றை இரக்கமில்லாமல் அழித்தார். அவர் அவரது கோபத்தில் யூதா மகளின் கோட்டைகளை அழித்தார். கர்த்தர் யூதாவின் இராஜ்யத்தையும் அதன் அரசர்களையும் தரையில் தூக்கி எறிந்தார். அவர் யூதாவின் இராஜ்யத்தை அழித்தார்.
RCTA பேத்: யாக்கோபின் வீடுகள் யாவற்றையும் ஆண்டவர் இரக்கமின்றி அழித்துவிட்டார்; யூதா என்னும் மகளின் கோட்டைகளைத் தம்முடைய கோபத்தில் தகர்த்து விட்டார்; அரசையும் அதை ஆள்வோரையும் வீழ்த்திச் சாபத்துக்குள்ளாக்கினார்.
ECTA ஆண்டவர் யாக்கோபின் அனைத்துக் குடியிருப்புகளையும் இரக்கமின்றி அழித்தார்; அவர் சீற்றமடைந்து மகள் யூதாவின் அரண்களைத் தகர்த்தார்; அவற்றைத் தரைமட்டமாக்கினார். அவரது நாட்டையும் அதன் தலைவர்களையும் மேன்மை குலையச் செய்தார்.