Versions
TOV பத்துப் பொன் விளக்குத்தண்டுகளையும், அவைகளுடைய பிரமாணத்தின்படி செய்வித்து, அவைகளை தேவாலயத்தில் வலதுபுறத்திலே ஐந்தும் இடதுபுறத்திலே ஐந்துமாக வைத்தான்.
IRVTA பத்துப் பொன் விளக்குத்தண்டுகளையும், அவைகளுடைய முறையின்படி செய்வித்து, அவைகளை தேவாலயத்தில் வலதுபுறத்திலே ஐந்தும் இடதுபுறத்திலே ஐந்துமாக வைத்தான்.
ERVTA சாலொமோன் 10 விளக்குத் தண்டுகளைத் தங்கத்தில் செய்தான். அவன் விளக்குத் தண்டுகளைச் செய்வதற்கான விதிமுறைகளைப் பயன்படுத்தினான். அவன் அவ்விளக்குத் தண்டுகளை ஆலயத்தில் வைத்தான். 5 விளக்குத் தண்டுகளை வலது பக்கத்திலும், 5 விளக்குத் தண்டுகளை இடது பக்கத்திலும் வைத்தான்.
RCTA மேலும், பத்துப் பொன்விளக்குத் தண்டுகளையும் ஏற்கெனவே குறிப்பிட்டவாறு செய்தார். ஐந்தை வலப்புறமும் ஐந்தை இடப்புறமுமாக ஆலயத்தில் வைத்தார்.
ECTA மேலும் அவர் பத்துப் பொன் விளக்குத் தண்டுகளை அவற்றிற்குரிய நியமத்தின்படி செய்து, ஐந்தை வலப்புறமும் ஐந்தை இடப்புறமுமாகத் தூயகத்தில் வைத்தார்;