Bible Versions
Bible Books

Daniel 4:19 (NCV) New Century Version

Versions

TOV   அப்பொழுது பெல்தெஷாத்சாரென்னும் பேருள்ள தானியேல் ஒரு நாழிகைமட்டும் திகைத்துச் சிந்தித்துக் கலங்கினான். ராஜா அவனை நோக்கி: பெல்தெஷாத்சாரே, சொப்பனமும் அதின் அர்த்தமும் உன்னைக் கலங்கப்பண்ணவேணடியதில்லை என்றான்; அப்பொழுது பெல்தெஷாத்சார் பிரதியுத்தரமாக: என் ஆண்டவனே, அந்தச் சொப்பனம் உம்முடைய பகைவரிடத்திலும், அதின் அர்த்தம் உம்முடைய சத்துருக்களிடத்திலும் பலிக்கக்கடவது.
IRVTA   அப்பொழுது பெல்தெஷாத்சாரென்னும் பெயருள்ள தானியேல் சற்றுநேரம் திகைத்துச் சிந்தித்துக் கலங்கினான். ராஜா அவனை நோக்கி: பெல்தெஷாத்சாரே, கனவும் அதின் அர்த்தமும் உன்னைக் கலங்கச்செய்யவேண்டியதில்லை என்றான்; அப்பொழுது பெல்தெஷாத்சார் மறுமொழியாக: என் எஜமானனே, அந்தச் கனவு உம்முடைய பகைவர்களிடத்திலும், அதின் அர்த்தம் உம்முடைய எதிரிகளிடத்திலும் பலிக்கக்கடவது.
ERVTA   தானியேல் (பெல்தெஷாத்சார்) ஓருமணி நேரத்திற்கு மிகவும் அமைதியாக இருந்தான். அவனது சிந்தனை அவனைப் பாதித்தது. எனவே, அரசன் அவனிடம்: "பெல்தெஷாத்சாரே (தானியேல்) கனவோ அல்லது அதன் பொருளோ உன்னைக் கலங்கப்பண்ணவேண்டியதில்லை" என்றான். பிறகு பெல்தெஷாத்சார் (தானியேல்) அரசனுக்குப் பதில் சொன்னான். என் எஜமானரே! அந்தக் கனவு உமது பகைவரைக் குறித்ததாய் இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். அந்தக் கனவின் பொருளும் உமக்கு விரோதமானவர்களைக் குறித்ததாக இருக்கவேண்டுமென நான் விரும்புகிறேன்.
RCTA   (16) அப்போது, பல்தசார் என்னும் பெயர் கொண்ட தானியேல் தனக்குள்ளே சில வினாடிகள் பேசாமல் சிந்திக்கத் துவக்கினார்; அவருடைய சிந்தனைகள் அவருக்குக் கலக்கத்தைக் கொடுத்தன; அதைக் கண்ட அரசன் அவரை நோக்கி. "பல்தசார் கனவும் உட்பொருளும் உம்மைக் கலங்க வைக்காதிருக்கட்டும்" என்றான்; பல்தசார் மறுமொழியாக, "என் ஆண்டவனே, அந்தக் கனவு உம்மை வெறுப்போருக்கும், அதன் உட்பொருள் உம் எதிரிகளுக்கும் பலிப்பதாக!
ECTA   இதைக் கேட்டவுடன் என்னும் பெயர்கொண்ட தானியேல் ஒரு கணம் திகைத்து நின்றார்; அவருடைய எண்ணங்கள் அவரைக் கலக்கமுறச் செய்தன. அதைக் கண்ட அரசன், "பெல்தசாச்சார், கனவோ அதன் உட்பொருளோ உம்மைக் கலக்கமுறச் செய்யவேண்டாம்" என்றான். பெல்தசாச்சார் மறுமொழியாக, "என் தலைவரே! இந்தக் கனவு உம் பகைவர்களுக்கும் இதன் உட்பொருள் உம் எதிரிகளுக்குமே பலிப்பதாக!
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us