Versions
TOV ஜாதிகளுக்கு ஒரு கொடியை ஏற்றி, இஸ்ரவேலில் துரத்துண்டவர்களைச் சேர்த்து, யூதாவில் சிதறடிக்கப்பட்டவர்களை பூமியின் நான்கு திசைகளிலுமிருந்து கூட்டுவார்.
IRVTA மக்களுக்கு ஒரு கொடியை ஏற்றி, இஸ்ரவேலில் துரத்துண்டவர்களைச் சேர்த்து, யூதாவில் சிதறடிக்கப்பட்டவர்களை பூமியின் நான்கு திசைகளிலுமிருந்து கூட்டுவார்.
ERVTA தேவன் இந்தக் "கொடியை" அனைத்து ஜனங்களுக்கும் அடையாளமாக ஏற்றுவார். யூதா மற்றும் இஸ்ரவேலில் உள்ள ஜனங்கள் தம் நாட்டைவிட்டுப் போகும்படி பலவந்தப்படுத்தப்படுவார்கள். ஜனங்கள் பூமியில் உள்ள தூரநாடுகளுக்கெல்லாம் சிதறிப் போனார்கள். ஆனால் தேவன் அனைவரையும் ஒன்று சேர்ப்பார்.
RCTA மக்களினங்களுக்கு ஒரு கொடியை ஏற்றுவார், இஸ்ராயேலில் வெளியேற்றப்பட்டவர்களை ஒன்று சேர்ப்பார்; யூதாவிலிருந்து சிதறுண்டு போனவர்களை உலகின் நான்கு மூலைகளினின்றும் ஒன்று கூட்டுவார்.
ECTA பிற இனத்தாருக்கென ஒரு கொடியை ஏற்றி வைப்பார்; இஸ்ரயேலில் நாடு கடத்தப்பட்டோரை ஒன்று திரட்டுவார்; யூதாவில் சிதறுண்டு போனவர்களை உலகின் நாற்புறத்திலிருந்தும் கூட்டிச் சேர்ப்பார்.