Versions
TOV அவர்கள் இருவரும் ஏகமாய்க்கூடி மேற்கேயிருக்கிற பெலிஸ்தருடைய எல்லைகளின்மேல் பாய்ந்து, கீழ்த்திசையாரைக் கொள்ளையிட்டு, ஏதோமின்மேலும் மோவாபின்மேலும் கைபோடுவார்கள்; அம்மோன் புத்திரர் அவர்களுக்குக் கீழ்ப்படிவார்கள்.
IRVTA அவர்கள் இருவரும் ஒன்றாகக்கூடி மேற்கேயிருக்கிற பெலிஸ்தருடைய எல்லைகளின்மேல் பாய்ந்து, கிழக்குத்திசையாரைக் கொள்ளையிட்டு, ஏதோமின்மேலும் மோவாபின்மேலும் போரிடுவார்கள்; அம்மோன் மக்கள் அவர்களுக்குக் கீழ்ப்படிவார்கள்.
ERVTA ஆனால் எப்பிராயீமும் யூதாவும் பெலிஸ்தர்களைத் தாக்குவார்கள். இந்த இரு நாடுகளும் சிறு மிருகங்களைப் பிடிக்கும் பறவைகளைப் போன்று சேர்ந்து பறக்கும். அவர்கள் இருவரும் கிழக்கு நாட்டு ஜனங்களின் ஐசுவரியத்தை கொள்ளையிடுவார்கள். எப்பிராயீமும் யூதாவும் ஏதோம், மோவாப் மற்றும் அம்மோன் ஜனங்களைக் கட்டுப்படுத்துவார்கள்.
RCTA ஆனால் மேற்கிலுள்ள பிலிஸ்தியர் மேல் இருவரும் பாய்வர், கீழ்த்திசை நாட்டினரை இருவரும் சேர்ந்து கொள்ளையிடுவர்; இதுமேயாவுக்கும் மோவாபுக்கும் எதிராகக் கையுயர்த்துவர், அம்மோன் மக்கள் அவர்களுக்கு அடிபணிந்திருப்பர்.
ECTA அவர்கள் இருவரும் சேர்ந்து மேற்கிலுள்ள பெலிஸ்தியரின் தோள்மேல் பாய்வார்கள்; கீழ்த்திசை நாட்டினரைக் கொள்ளையடிப்பார்கள்; ஏதோமையும் மோவாபையும் கைப்பற்றிக் கொள்வார்கள்; அம்மோன் மக்கள் அவர்களுக்கு அடிபணிவார்கள்.