Bible Versions
Bible Books

Nahum 3:3 (NCV) New Century Version

Versions

TOV   வீரர் குதிரை ஏறுகிறதும், பட்டயங்கள் துலங்குகிறதும், ஈட்டிகள் மின்னுகிறதும், வெட்டுண்டவர்களின் திரளும், பிரேதங்களின் ஏராளமும் அங்கே உண்டாயிருக்கும்; பிணங்களுக்குத் தொகையில்லை; அவர்கள் பிணங்களில் இடறிவிழுகிறார்கள்.
IRVTA   வீரர்கள் குதிரை ஏறுகிறதும், பட்டயங்கள் பிரகாசிக்கிறதும், ஈட்டிகள் மின்னுகிறதும், வெட்டுண்டவர்களின் குவியலும், பிரேதங்களின் மிகுதியும் அங்கே உண்டாயிருக்கும்; பிணங்களுக்கு கணக்கில்லை; அவர்கள் பிணங்களில் தடுக்கிவிழுகிறார்கள்.
ERVTA   குதிரைமேல் வந்த வீரர்கள் தாக்குகின்றனர். அவர்களின் வாள்கள் மின்னுகின்றன. அவர்களின் ஈட்டிகள் மின்னுகின்றன. அங்கே, ஏராளமான மரித்த ஜனங்கள், மரித்த உடல்கள் குவிந்துள்ளன. எண்ணுவதற்கு முடியாத ஏராளமான உடல்கள் உள்ளன. ஜனங்கள் மரித்த உடல்களில் தடுக்கி விழுகின்றனர்.
RCTA   சீறித் தாக்கும் குதிரை வீரர்கள், மின்னும் வாள், பளபளக்கும் ஈட்டி, வெட்டுண்டவர்களின் கூட்டம், பிணங்களின் குவியல், செத்தவர்களுக்குக் கணக்கில்லை- பிணங்களின்மேல் இடறி விழுகின்றனர்!
ECTA   குதிரை வீரர்கள் பாய்ந்து தாக்குகின்றனர்; வாள் மின்னுகின்றது; ஈட்டி பளபளக்கின்றது; வெட்டுண்டவர்கள் கூட்டமாய்க் கிடக்கின்றனர்; பிணங்கள் குவிந்து கிடக்கின்றன; செத்தவர்களுக்குக் கணக்கே இல்லை; அந்தப் பிணங்கள் மேல் மனிதர் இடறிவிழுகின்றனர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us