Versions
TOV அப்பொழுது நான் யூதாவின் பிரபுக்களை அலங்கத்தின்மேல் ஏறப்பண்ணி, துதிசெய்து நடந்துபோகும்படி இரண்டு பெரிய கூட்டத்தாரை நிறுத்தினேன்; அவர்களில் ஒரு கூட்டத்தார் அலங்கத்தின்மேல் வலதுபுறமாகக் குப்பைமேட்டு வாசலுக்குப் போனார்கள்.
IRVTA அப்பொழுது நான் யூதாவின் பிரபுக்களை மதிலின்மேல் ஏறச்செய்து, துதிசெய்து நடந்துபோவதற்காக இரண்டு பெரிய கூட்டத்தார்களை நிறுத்தினேன்; அவர்களில் ஒரு கூட்டத்தார் மதிலின்மேல் வலதுபுறமாகக் குப்பைமேட்டு வாசலுக்குப் போனார்கள்.
ERVTA நான் யூதாவின் தலைவர்களிடம் மேலே ஏறி சுவரின் உச்சியில் நிற்கவேண்டும் என்று சொன்னேன். தேவனுக்கு நன்றி செலுத்துவதற்கு இரண்டு பாடகர் குழுவை நான் தேர்ந்தெடுத்தேன். ஒரு குழு சுவரின் உச்சிக்கு மேலே ஏறி வலது பக்கத்தில் சாம்பல் குவியல் வாயிலை நோக்கிப்போனார்கள்.
RCTA அப்பொழுது நான் யூதாவின் தலைவர்களை மதிலின்மேல் ஏறச் சொல்லி, துதிபாட இரண்டு பெரிய பாடகர் குழுக்களை நிறுத்தினேன். அவர்களில் ஒரு குழுவினர் வலப்பக்கம் இருந்த குப்பை மேட்டு வாயிலை நோக்கிப் போனார்கள்.
ECTA அப்பொழுது நான், யூதாவின் தலைவர்களை மதில்மேல் ஏறச் சொல்லி, புகழ்பாட இரண்டு பாடகர் குழுக்களை நிறுத்தினேன். ஒரு குழுவினர் வலப்பக்கம் இருந்த குப்பைமேட்டு வாயிலை நோக்கி, மதிலின்மேல் பவனியாகச் சென்றார்கள்.