Versions
TOV அவன் தேவனுடைய ஆலயத்தின் வேலையிலும், தன் தேவனைத் தேடும்படிக்கு நியாயப்பிரமாணத்திற்கும் கற்பனைக்கும் அடுத்த காரியத்திலும் என்ன செய்யத் தொடங்கினானோ, அதையெல்லாம் தன் முழு இருதயத்தோடும் செய்து சித்திபெற்றான்.
IRVTA அவன் தேவனுடைய ஆலயத்தின் வேலையிலும், தன் தேவனைத் தேடும்படிக்கு நியாயப்பிரமாணத்திற்கும் கற்பனைக்கும் அடுத்த காரியத்திலும் என்ன செய்யத் தொடங்கினானோ, அதையெல்லாம் தன் முழு இருதயத்தோடும் செய்து வெற்றிபெற்றான். PE
ERVTA அவன் தொடங்கிய அனைத்து வேலைகளிலும் வெற்றிகரமாய்த் திகழ்ந்தான். தேவனுடைய ஆலய சேவையிலும் சட்டத்திற்கும் கட்டளைகளுக்கும் அடிபணிகிற செயலிலும் தேவனைப் பின்பற்றும் முறையிலும் வெற்றிகரமாய்த் திகழ்ந்தான். எசேக்கியா இவற்றையெல்லாம் தன் முழு இருதயத்தோடு செய்தான்.
RCTA கடவுளின் ஆலயத் திருப்பணிக்கடுத்த காரியங்களை எல்லாம் திருச் சட்டத்திற்கும் சடங்கு முறைகளுக்கும் ஏற்ற விதமாகவே செய்து, தன் முழு மனத்தோடும் ஆண்டவரை நாடினான். எனவே எல்லாவற்றிலும் அவன் வெற்றி கண்டான்.
ECTA அவர் கடவுள் இல்லத்திற்கான ஒவ்வொரு திருப்பணியையும் திருச்சட்டத்திற்கும் கட்டளைக்கும் ஏற்றவாறு செய்து ஆர்வமுடன் உழைத்து, தம் கடவுளை முழு இதயத்தோடு நாடினதால், அவர் அனைத்திலும் வெற்றி கண்டார்.