Bible Versions
Bible Books

1 Kings 12:11 (TOV) Tamil Old BSI Version

Versions

TOV   இப்போதும் என் தகப்பன் பாரமான நுகத்தை உங்கள்மேல் வைத்தார், நான் உங்கள் நுகத்தை அதிக பாரமாக்குவேன்; என் தகப்பன் உங்களைச் சவுக்குகளினாலே தண்டித்தார், நான் உங்களைத் தேள்களினாலே தண்டிப்பேன் என்று நீர் அவர்களோடே சொல்லவேண்டும் என்றார்கள்.
IRVTA   இப்போதும் என்னுடைய தகப்பன் பாரமான சுமையை உங்கள்மேல் வைத்தார், நான் உங்களுடைய சுமையை அதிக பாரமாக்குவேன்; என்னுடைய தகப்பன் உங்களைச் சவுக்குகளினாலே தண்டித்தார், நான் உங்களைத் தேள்களினாலே தண்டிப்பேன் என்று நீர் அவர்களோடு சொல்லவேண்டும் என்றார்கள்.
ERVTA   என் தந்தை கடினமான வேலையைச் செய்யும்படி கட்டாயப்படுத்தினார். நான் அதைவிட கடினமான வேலையைத் தருவேன்! அவர் சாட்டை மூலம் கட்டாயப்படுத்தினார். ஆனால் நான் அடித்து கட்டாயப்படுத்துவேன் எனது அடிகள் தேளின் கொடுக்கைப் போலிருக்கும்’ என்றுசொல்!" என்றனர்.
RCTA   இப்பொழுது என் தந்தை பாரமான நுகத்தை உங்கள் மேல் சுமத்தியுள்ளார்; நானோ அதன் பளுவை இன்னும் அதிகப் படுத்துவேன். என் தந்தை உங்களைச் சாட்டைகளினால் தண்டித்தார்; நானோ உங்களை முள் சாட்டைகளினால் தண்டிப்பேன்' என்று நீர் அவர்களுக்குச் சொல்ல வேண்டும்" என்றனர்.
ECTA   என் தந்தை பளுவான நுகத்தை உங்கள் மேல் சுமத்தினார்; நானோ அதை இன்னும் பளுவாக்குவேன். என் தந்தை உங்களைச் சாட்டையால் அடித்தார்; நானோ உங்களை முள் சாட்டையால் அடிப்பேன்" என்று நீர் சொல்லும்"" என்றனர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us