Versions
TOV பெலிஸ்தரும் யூதாவிலே சமபூமியிலும் தெற்கேயும் இருக்கிற பட்டணங்களின்மேல் விழுந்து, பெத்ஷிமேசையும், ஆயலோனையும், கெதெரோத்தையும், சொக்கோவையும் அதின் கிராமங்களையும், திம்னாவையும் அதின் கிராமங்களையும், கிம்சோவையும் அதின் கிராமங்களையும்பிடித்து அங்கே குடியேறினார்கள்.
IRVTA பெலிஸ்தரும் யூதாவிலே சமபூமியிலும் தெற்கேயும் இருக்கிற பட்டணங்களைத் தாக்கி, பெத்ஷிமேசையும், ஆயலோனையும், கெதெரோத்தையும், சோக்கோவையும் அதின் கிராமங்களையும், திம்னாவையும் அதின் கிராமங்களையும், கிம்சோவையும் அதின் கிராமங்களையும் பிடித்து அங்கே குடியேறினார்கள்.
ERVTA பெலிஸ்தர்களும் மலைநாட்டு நகரங்களையும் யூதாவின் தென் பகுதியையும் தாக்கினார்கள். இவர்கள் பெத்ஷிமேஸ், ஆயலேன், கெதெரோத், சொக்கோ, திம்னா மற்றம் கிம்சோ ஆகிய ஊர்களைக் கைப்பற்றினார்கள். மேலும் அவர்கள் அந்த ஊர்களுக்கு அருகிலிருந்த கிராமங்களையும் கைப்பற்றினார்கள் பிறகு பெலிஸ்தியர்கள் அந்த ஊர்களில் வாழ்ந்தார்கள்.
RCTA பிலிஸ்தியர் யூதாவின் சமவெளிகளிலும் தென்னாட்டிலும் இருந்த நகர்களைத் தாக்கினர். பெத்சாமேசையும் சொக்கோவையும், தம்னாவையும் கம்சோவையும் அவற்றை அடுத்த ஊர்களையும் கைப்பற்றி அங்கே குடியேறினர்.
ECTA பெலிஸ்தியர் யூதாவின் சமவெளி நகர்களுக்கும் தென்பகுதிக்கும் எதிராக எழுந்து, பெத்சமேசு, அய்யலோன், கெதெரோத்து ஆகியவற்றையும், சோக்கோவையும் அதன் சிற்றூர்களையும் திம்னாவையும் அதன் சிற்றூர்களையும், கிம்சோவையும் அதன் சிற்றூர்களையும் கைப்பற்றி அங்கே குடியேறினர்.