Bible Versions
Bible Books

2 Samuel 3:8 (TOV) Tamil Old BSI Version

Versions

TOV   அப்னேர் இஸ்போசேத்தின் வார்த்தைகளுக்காக மிகவும் கோபங்கொண்டு: உம்மைத் தாவீதின் கையில் ஒப்புக்கொடாமல், இந்நாள்மட்டும் உம்முடைய தகப்பனாகிய சவுலின் குடும்பத்துக்கும், அவருடைய சகோதரருக்கும், சிநேகிதருக்கும், தயவு செய்கிறவனாகிய என்னை நீர் இன்று ஒரு ஸ்திரீயினிமித்தம் குற்றம் பிடிக்கிறதற்கு, நான் யூதாவுக்கு உட்கையான ஒரு நாய்த்தலையா?
IRVTA   அப்னேர் இஸ்போசேத்தின் வார்த்தைகளுக்காக மிகவும் கோபங்கொண்டு: உம்மை தாவீதின் கையில் ஒப்புக்கொடுக்காமல், இந்த நாள்வரை உம்முடைய தகப்பனான சவுலின் குடும்பத்திற்கும், அவருடைய சகோதரர்களுக்கும், நண்பர்களுக்கும், தயவு செய்கிறவனான என்னை நீர் இன்று ஒரு பெண்ணிற்காக குற்றம் கண்டுபிடிப்பதற்கு, நான் யூதாவைச் சேர்ந்த ஒரு நாயின் தலையா?
ERVTA   இஸ்போசேத் இவ்வாறு கேட்டதால் அப்னேர் கோபமடைந்தான் அப்னேர், "நான் சவுலுக்கும் அவனது குடும்பத்துக்கும் உண்மையுள்ளவனாக இருந்தேன். நான் உன்னைத் தாவீதிடம் ஒப்படைக்கவில்லை. அவன் உன்னைத் தோற்கடிக்க அனுமதிக்கவில்லை. நான் யூதாவுக்காக உழைக்கும் வஞ்சகன் அல்ல. நான் இத்தீயக் காரியத்தைச் செய்ததாக நீ கூறிக்கொண்டிருக்கிறாய்.
RCTA   நீ என் தந்தையின் வைப்பாட்டியோடு படுத்தது ஏன்? என்றான். அவன் இசுபோசேத்துடைய வார்த்தையின் பொருட்டு மிகவும் கோபம் கொண்டு, "நான் உம் தந்தை சவுலின் குடும்பத்தின் மேலும், அவருடைய உடன்பிறந்தார், உற்றார் மேலும் இரக்கம் கொண்டு உம்மைத் தாவீதுடைய கையில் ஒப்படைக்காமலிருந்தேன். நான் என்ன நாய்த் தலையனா? இன்று நீரோ என் எதிரியாகிய யூதாவுக்கு முன்பாக அப்பெண் காரியமாய் என்னை விசாரித்துக் குற்றம் கண்டு பிடிக்க வந்துள்ளீரே!
ECTA   இஸ்பொசேத்தின் கேள்வி அப்னேருக்குக் கடுஞ்சினத்தை ஏற்படுத்தியது. நான் என்ன யூதாவுக்கு வாலாட்டும் நாயா? உன் தந்தை சவுலின் வீட்டாருக்கும் அவருடைய சகோதரர் நண்பர்களுக்கும் இன்று நான் உண்மையுள்ளவனாய் இருக்கிறேன். தாவீதின் கைகளில் உன்னை நான் ஒப்புவிக்கவில்லை. நீயோ, இன்று ஒரு பெண்ணைக் குறித்து குற்றம் சாட்டுகிறாய்!
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us