Bible Versions
Bible Books

Daniel 11:25 (TOV) Tamil Old BSI Version

Versions

TOV   பின்னும் தென்றிசை ராஜாவுக்கு விரோதமாகப் பெரிய சேனையோடே போர்செய்யத் தன் வல்லமையையும் தன் ஸ்திரத்தையும் எழுப்புவான்; அப்பொழுது தென்றிசை ராஜா மிகவும் பலத்த பெரிய இராணுவத்தோடே போய் யுத்தங்கலப்பான்; ஆனாலும் அவர்கள் அவனுக்கு விரோதமாகத் துராலோசனைபண்ணியிருந்தபடியால், அவன் நிற்கமாட்டான்.
IRVTA   பின்னும் தெற்கு திசை ராஜாவிற்கு விரோதமாகப் பெரிய படையோடே போர்செய்யத் தன் வல்லமையையும் தன் பெலத்தையும் எழுப்புவான்; அப்பொழுது தெற்கு திசை ராஜா மிகவும் பலத்த பெரிய இராணுவத்தோடே போய் போரிடுவான்; ஆனாலும் அவர்கள் அவனுக்கு விரோதமாகத் தீய ஆலோசனை செய்திருந்தபடியால், அவன் நிற்கமாட்டான்.
ERVTA   "அந்த கொடூரமான வெறுக்கத்தக்க அரசனுக்கு மிகப்பெரிய படை இருக்கும். அவன் அப்படையைப் பயன்படுத்தி தனது வல்லமையையும் தைரியத்தையும் காட்டி தென் பகுதி அரசனைத் தாக்குவான். தென் பகுதி அரசன் மிகப்பெரியதும், வல்லமை உடையதுமான படையைப் பெற்று போருக்குப் போவான். ஆனால் அவனுக்கு எதிரான ஜனங்கள் இரகசிய திட்டங்களை இடுவர்கள். தென்பகுதி அரசன் தோற்கடிக்கப்படுவான்.
RCTA   பிறகு அவன் தன் வல்லமையை நம்பித் தென்திசை மன்னனுக்கு எதிராகப் பெருஞ் சேனையோடு போவான்; அப்போது தென்றிசை மன்னனும் வலிமை மிக்க பெரும் படையோடு வந்து போர் முனையில் சந்திப்பான்; ஆனால் அவனுக்கு விரோதமாகச் சதித்திட்டங்கள் செய்யப்பட்டிருந்தபடியால் அவனுடைய படைகள் நிலைத்து நிற்கவில்லை.
ECTA   பிறகு அவன் தன் வலிமையை நம்பித் தென்திசை மன்னனுக்கு எதிராகப் பெரும்படையோடு போரிடத் துணிந்து செல்வான். அப்பொழுது, தென்திசை மன்னனும் வலிமைமிக்க பெரும் படையோடு வந்து போர்முனையில் சந்திப்பான்; ஆனால் அவனுக்கு எதிராகச் சதித்திட்டங்கள் செய்யப்பட்டிருந்தபடியால், அவன் நிலைகுலைந்து போவான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us