Versions
TOV அவர்கள், இஸ்ரவேல் புத்திரர் திருப்பணிக்கடுத்த சகல வேலைகளுக்காகவும் கொண்டுவந்த காணிக்கைப் பொருள்களையெல்லாம், மோசேயினிடத்தில் வாங்கிக்கொண்டார்கள். பின்னும் ஜனங்கள் காலைதோறும் தங்களுக்கு இஷ்டமான காணிக்கைகளை அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்.
IRVTA அவர்கள், இஸ்ரவேலர்கள் திருப்பணிகளின் எல்லா வேலைகளுக்காகவும் கொண்டுவந்த காணிக்கைப் பொருட்களையெல்லாம், மோசேயிடம் வாங்கிக்கொண்டார்கள். பின்னும் மக்கள் காலைதோறும் தங்களுக்கு விருப்பமான காணிக்கைகளை அவனிடம் கொண்டுவந்தார்கள்.
ERVTA இஸ்ரவேல் ஜனங்கள் காணிக்கையாகக் கொண்டு வந்த எல்லாப் பொருட்களையும் மோசே இந்த ஜனங்களுக்குக் கொடுத்தான். தேவனின் பரிசுத்த இடத்தை எழுப்புவதற்கு அவர்கள் அந்தப் பொருட்களைப் பயன்படுத்தினார்கள். காலைதோறும் ஜனங்கள் தங்கள் விருப்பதின்படி காணிக்கைகளை கொண்டு வந்தனர்.
RCTA இஸ்ராயேல் மக்கள் கொடுத்திருந்த காணிக்கைப் பொருட்களையெல்லாம் கொடுத்தார். பின் அவர்கள் முழுமனத்தோடு வேலை செய்து வருகையில் மக்கள் காலை தோறும் தங்களுக்கு விருப்பமான காணிக்கைகளைக் கொண்டு வருவார்கள்.
ECTA தூயக வேலைக்கென்று இஸ்ரயேல் மக்கள் கொண்டு வந்த காணிக்கைகள் யாவற்றையும் இவர்கள் மோசே முன்னிலையிலிருந்து எடுத்துச் சென்றனர். தொடர்ந்து தன்னார்வக் காணிக்கைகள் காலைதோறும் வந்தவண்ணமாயிருந்தன.