Versions
TOV அவர்கள் முகத்திற்கு முன்பாக ஜாதிகளைத் துரத்திவிட்டு, தேசத்தை நூல்போட்டுப் பங்கிட்டு, அவர்களுடைய கூடாரங்களில் இஸ்ரவேலின் கோத்திரங்களைக் குடியேற்றினார்.
IRVTA அவர்கள் முகத்திற்கு முன்பாக தேசங்களைத் துரத்திவிட்டு,
தேசத்தை நூல்போட்டுப் பங்கிட்டு,
அவர்களுடைய கூடாரங்களில் இஸ்ரவேலின் கோத்திரங்களைக் குடியேற்றினார்.
ERVTA பிற தேசத்தினரை அந்நாட்டிலிருந்து போகும்படியாக தேவன் கட்டாயப்படுத்தினார். தேவன் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தேசத்தில் அவரவர்களின் பங்கைக் கொடுத்தார். தேவன் ஒவ்வொரு இஸ்ரவேல் கோத்திரத்தினருக்கும் வசிப்பதற்கு வீட்டைத் தந்தார்.
RCTA அவர்கள் போகுமிடத்தில் இருந்த வேற்றினத்தாரை விரட்டி விட்டார்; அந்நாடுகளை இஸ்ராயேலருக்குப் பங்கிட்டுக் கொடுத்தார்: அந்நாட்டுக் குடியிருப்புகளில் அவர்களை வாழச் செய்தார்.
ECTA அவர்கள் முன்னிலையில் வேற்றினத்தாரை அவர் விரட்டியடித்தார்; அவர்களுக்கு நாட்டைப் பங்கிட்டு உரிமைச் சொத்தாகக் கொடுத்தார்; இஸ்ரயேல் குலங்களை அவர்கள் கூடாரங்களில் குடியேற்றினார்.