Versions
TOV பாகாலானான் மரித்தபின், ஆதாத் அவன் ஸ்தானத்தில் இராஜாவானான்; இவன் பட்டணத்தின் பேர் பாகி; மேசகாபின் குமாரத்தியாகிய மாத்திரேத்தின் மகளான அவன் மனைவியின் பேர் மெகேதபேல்.
IRVTA பாகாலானான் இறந்தபின்பு, ஆதாத் அவன் இருந்த இடத்தில் இராஜாவானான்; இவனுடைய பட்டணத்தினுடைய பெயர் பாகி; மேசகாபின் மகளாகிய மத்ரேத்தின் மகளான அவனுடைய மனைவியின் பெயர் மெகேதபேல். PS
ERVTA பாகாலானான் மரித்தபின், ஆதாத் அவனுக்குப் பின் புதிய அரசன் ஆனான். இவனது நகரத்திற்கு பாகி என்று பெயரிடப்பட்டது. ஆதாத்தின் மனைவியின் பெயர் மெகேதபேல் ஆகும். மாத்திரேத்தின் மகள் மெகேதபேல் ஆவாள். மேசகாபின் மகள் மாத்திரேத் ஆவாள். பிறகு, ஆதாத் மரித்தான்.
RCTA இவருக்குப் பின் ஆதாத் ஆட்சி பீடத்தில் அமர்ந்தார். இவரது தலைநகரின் பெயர் பாவு. இவருடைய மனைவி பெயர் மெக்தாபேல். இவள் மெசாப் என்பவளின் மகள், மாத்தேத்தின் புதல்வி.
ECTA பாகால் அனான் இறந்தபின், அதாது அவருக்குப் பதிலாக அரசர் ஆனார். அவரது நகரின் பெயர் பாயி; மேசகாபின் பேத்தியும் மத்ரேத்தின் மகளுமான மெகேற்றபேல் என்பவரே அவர் தம் மனைவி.