Versions
TOV ஆனபடியினால் ஒருவனும் அவனை அற்பமாய் எண்ணாதிருப்பானாக; சகோதரரோடேகூட அவன் வருகிறதற்கு நான் காத்திருக்கிறபடியால், என்னிடத்தில் வரும்படிக்கு அவனைச் சமாதானத்தோடே வழிவிட்டனுப்புங்கள்.
IRVTA ஆனபடியினால் ஒருவனும் அவனை இழிவாக நினைக்காதிருப்பானாக; சகோதரர்களோடுகூட அவன் வருகிறதற்கு நான் காத்திருக்கிறபடியால், என்னிடத்தில் வரும்படிக்கு அவனைச் சமாதானத்தோடு வழியனுப்பிவையுங்கள்.
ERVTA எனவே உங்களில் ஒருவரும் தீமோத்தேயுவை ஏற்றுக் கொள்ள மறுக்கக் கூடாது. என்னிடம் அவன் வரமுடியும் வகையில் அவனது பயணம் அமைதி நிரம்பியதாக இருப்பதற்கு உதவுங்கள். சகோதரர்களுடன் சேர்ந்து அவன் என்னிடம் வருவதை எதிர்ப்பார்க்கிறேன்.
RCTA யாரும் அவரை இழிவாக எண்ணக் கூடாது; அவர் அங்கிருந்து என்னிடம் திரும்பி வரும்போது அன்போடு அனுப்பிவையுங்கள்; நானும் சகோதரர்களும் அவருக்காகக் காத்திருக்கிறோம்.
ECTA ஆகையால் யாரும் அவரை இழிவாக நடத்தக் கூடாது. அவர் என்னிடம் வந்து சேர நலமாய் வழி அனுப்பிவையுங்கள். ஏனெனில் நானும் இங்குள்ள சகோதரர்களும் அவருக்காகக் காத்திருக்கிறோம்.