Versions
TOV அப்பொழுது அந்த வேலைக்காரரில் ஒருவன் பிரதியுத்தரமாக: இதோ, பெத்லெகேமியனாகிய ஈசாயின் குமாரன் ஒருவனைக் கண்டிருக்கிறேன்; அவன் வாசிப்பதில் தேறினவன், அவன் பராக்கிரமசாலி, யுத்தவீரன், காரியசமர்த்தன், சவுந்தரியமுள்ளவன்; கர்த்தர் அவனோடேகூட இருக்கிறார் என்றான்.
IRVTA அப்பொழுது அந்த வேலைக்காரரில் ஒருவன் பதிலாக: இதோ, பெத்லெகேமியனான ஈசாயின் மகன் ஒருவனை பார்த்திருக்கிறேன்; அவன் வாசிப்பதில் தேறினவன், அவன் பலசாலி, யுத்தவீரன், பேச்சு திறமை உள்ளவன், அழகானவன்; யெகோவா அவனோடு இருக்கிறார் என்றான்.
ERVTA ஒரு வேலையாள், "ஈசாய் என்று ஒருவன் பெத்லேகேமில் இருக்கிறான். அவனது மகனுக்கு நன்றாக சுர மண்டலம் வாசிக்கத் தெரியும், தைரியமாக நன்றாக சண்டை இடுவான். அழகானவனும் சுறுசுறுப்பானவனும் கூட, மேலும் கர்த்தர் அவனுடன் இருக்கிறார்" என்றான்.
RCTA அப்பொழுது அவருடைய ஊழியர்களில் ஒருவன் மறுமொழியாக, "இதோ பெத்லகேம் ஊரானான இசாயி மகனைப் பார்த்தேன். அவனுக்கு யாழ் மீட்டத் தெரியும்; அவன் வலிமை வாய்ந்தவன்; போர் வீரன்; பேச்சுத் திறமுள்ளவன்; அழகானவன். ஆண்டவர் அவனுடன் இருக்கிறார்" என்று சொன்னான்.
ECTA பணியாளர்களில் ஒருவன் இதோ பெத்லகேமைச் சார்ந்த ஈசாயின் மகனைப் பார்த்தேன்; அவன் யாழ் மீட்டுவதில் வல்லவன்; வீரமுள்ளவன்; போர்த்திறன் பெற்றவன்; பேச்சுத் திறன் உடையவன்; அழகானவன்; மேலும் ஆண்டவர் அவனோடு இருக்கிறார்" என்றான்.