Versions
TOV பசும்பொன் கத்திகளையும், கலங்களையும், கலயங்களையும், தூபகலசங்களையும் சாலொமோன் பண்ணினான்; மகா பரிசுத்தஸ்தலத்தின் உட்கதவுகளும், ஆலயமாகிய வீட்டின் கதவுகளும், ஆலயத்தின் வாசல் கதவுகளும் எல்லாம் பொன்னாயிருந்தது.
IRVTA பசும்பொன் கத்திகளையும், கலங்களையும், கலயங்களையும், தூபகலசங்களையும் சாலொமோன் செய்தான்; மகா பரிசுத்தஸ்தலத்தின் உட்கதவுகளும், ஆலயமாகிய வீட்டின் கதவுகளும், ஆலயத்தின் வாசல் கதவுகளும் அனைத்தும் பொன்னாயிருந்தது. PE
ERVTA கத்திகளையும், கலங்களையும், கலயங்களையும், தூபகலசங்களையும் செய்ய சாலொமோன் தூய பொன்னையே பயன்படுத்தினான். மகா பரிசுத்தமான இடத்தின் உட்கதவுகளையும் ஆலயத்தின் கதவுகளையும் வாசல் கதவுகளையும் பொன்னால் செய்வித்தான்.
RCTA நறுமண எண்ணெய்ச் சிமிழ்களையும் தூபக் கலசங்களையும் கிண்ணங்களையும் சிறிய உரல்களையும் பசும் பொன்னால் செய்தார். உள்தூயகக் கதவுகளில் வேலைப்பாடுகளை அமைத்து, ஆலய வெளிவாயில்களைத் தங்கத்தால் செய்தார். இவ்வாறு சாலமோன் செய்து வந்த ஆண்டவரின் ஆலய வேலை முடிவுற்றது.
ECTA கத்தரிக்கோல்களையும், தீர்த்தச் செம்புகளையும், கரண்டிகளையும் தூபகலசங்களையும் பசும் பொன்னால் செய்தார்; மேலும் கோவில் வாயில்களையும், அதாவது திருத்தூயகக் கதவுகளையும் தூயகக் கதவுகளையும் தங்கத்தால் செய்தார்.