Versions
TOV அவன் ஸ்தானத்தில் அவமதிக்கப்பட்டவன் ஒருவன் எழும்புவான்; இவனுக்கு ராஜ்யபாரத்தின் மேன்மையைக் கொடாதிருப்பார்கள்; ஆனாலும் இவன் சமாதானமாய் நுழைந்து, இச்சகம் பேசி, ராஜ்யத்தைக் கட்டிக்கொள்ளுவான்.
IRVTA அவன் இடத்தில், அவமதிக்கப்பட்டவன் ஒருவன் எழும்புவான்; இவனுக்கு ராஜ்ஜியபாரத்தின் மேன்மையைக் கொடுக்காதிருப்பார்கள்; ஆனாலும் இவன் சமாதானமாக நுழைந்து, ஆசைவார்த்தை பேசி, ராஜ்ஜியத்தைப் பிடித்துக்கொள்வான்.
ERVTA "அந்த அரசனைப் பின்தொடர்ந்து ஒரு கொடுமையான வெறுக்கத்தக்க மனிதன் வருவான். அவனுக்கு அரச குடும்பத்தவன் என்ற பெருமை இருக்காது. அவன் தந்திரமான வழியில் அரசன் ஆவான். ஜனங்கள் பாதுகாப்பாக இருப்பதாக உணரும்போது அவன் இராஜ்யத்தைத் தாக்குவான்.
RCTA "அவனது இடத்தில் ஈனன் ஒருவன் எழும்புவான்; அவனுக்கு அரச சிறப்பு தரப்படாது; ஆனால் எதிர்பாராத நேரத்தில் வந்து வஞ்சகமாய் அரசைக் கைப்பற்றிக் கொள்வான்.
ECTA அவனது இடத்தில் இழிந்தவன் ஒருவன் எழும்புவான்; அவனுக்கு எவ்வித அரசுரிமையும் கிடையாது; ஆயினும் எதிர்பாராத நேரத்தில் வந்து முகப்புகழ்ச்சியால் அரசைக் கைப்பற்றிக் கொள்வான்.