Versions
TOV வனாந்தரத்தில் அவர்களுடைய பிள்ளைகளை நோக்கி: நீங்கள் உங்கள் பிதாக்களின் முறைமைகளில் நடவாமலும் அவர்களுடைய நியாயங்களைக் கைக்கொள்ளாமலும், அவர்களுடைய நரகலான விக்கிரகங்களால் உங்களைத் தீட்டுப்படுத்தாமலும் இருங்கள்.
IRVTA வனாந்திரத்தில் அவர்களுடைய பிள்ளைகளை நோக்கி: நீங்கள் உங்களுடைய பெற்றோர்களின் முறைமைகளில் நடக்காமலும் அவர்களுடைய நியாயங்களைக் கைக்கொள்ளாமலும், அவர்களுடைய அசுத்தமான சிலைகளால் உங்களைத் தீட்டுப்படுத்தாமலும் இருங்கள்.
ERVTA வனாந்திரத்தில் நான் அவர்களது பிள்ளைகளோடு பேசினேன். ‘உங்கள் பெற்றோர்களைப்போன்று இருக்க வேண்டாம். நீங்கள் அசுத்த சிலைகளோடு சேர்ந்து அசுத்தமாகவேண்டாம். அவர்களின் சட்டங்களைப் பின்பற்றவேண்டாம். அவர்களது கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவேண்டாம்.
RCTA நாம் பாலை நிலத்தில் அவர்களுடைய பிள்ளைகளை நோக்கி: உங்கள் தந்தையரின் முறைமைகளின்படி நீங்கள் நடவாமலும், அவர்களுடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்காமாலும் அவர்களுடைய சிலைகளினால் தீட்டுப்படாமலும் இருங்கள்;
ECTA ஆனால், பாலை நிலத்திலேயே அவர்களுடைய புதல்வர்களைப் பார்த்து; "உங்கள் மூதாதையரின் நியமங்களின்படி நடவாதீர்கள். அவர்களுடைய நீதிநெறிகளைக் கைக்கொள்ளாதீர்கள். அவர்களுடைய தெய்வச் சிலைகளால் உங்களையே தீட்டுப்படுத்திக் கொள்ளாதீர்கள்.