Versions
TOV உன் வியாபாரத்தின் மிகுதியினால், உன் கொடுமை அதிகரித்து நீ பாவஞ்செய்தாய்; ஆகையால் நான் உன்னை தேவனுடைய பர்வதத்திலிருந்து ஆகாதவனென்று தள்ளி, காப்பாற்றுகிற கேருபாய் இருந்த உன்னை அக்கினிமயமான கற்களின் நடுவே இராதபடிக்கு அழித்துப்போடுவேன்.
IRVTA உன்னுடைய வியாபாரத்தின் மிகுதியினால், உன்னுடைய கொடுமை அதிகரித்து நீ பாவம்செய்தாய்; ஆகையால் நான் உன்னை தேவனுடைய மலையிலிருந்து ஆகாதவனென்று தள்ளி, காப்பாற்றுகிற கேருபாக இருந்த உன்னை நெருப்புபோன்ற கற்களின் நடுவே இல்லாமல் அழித்துப்போடுவேன்.
ERVTA உனது வியாபாரம் உனக்குப் பெருஞ் செல்வத்தைத் தந்தது. ஆனால் அவை உனக்குள் கொடூரத்தை வைத்தன. நீ பாவம் செய்தாய். எனவே நான் உன்னைச் சுத்தமற்ற ஒன்றாக நடத்தினேன். நான் உன்னைத் தேவனுடைய மலையில் இருந்து அப்பால் எறிந்தேன். நீ சிறப்புக்குரிய கேருபீன்களில் ஒருவன். உனது சிறகுகள் என் சிங்காசனத்தின்மேல் விரிந்தன. ஆனால் நான் உன்னை நெருப்பை போன்று ஒளிவீசும் நகைகளைவிட்டு விலகச் செய்தேன்.
RCTA வியாபார மிகுதியால் உன்னில் அக்கிரமம் நிறைந்தது; நீ பாவத்தைச் செய்தாய்; ஆகையால் கடவுளின் மலையிலிருந்து அசுத்தமாயிருந்த உன்னைத் தள்ளினோம், காப்பாற்றும் கெரூபு உன்னை அக்கினி மயமான இரத்தினங்களின் நடுவினின்று வெளியேற்றியது.
ECTA பரந்த உன் வாணிபத்தால் வன்முறை நிறைந்தது உன்னில்; பாவம் செய்தாய் நீயே! எனவே, வெறுப்புடன் உன்னைக் கடவுளின் மலையினின்று வெளியேற்றினேன்; ஓ! காவல்காக்கும் கெருபே! உன்னை ஒளிவீசும் கற்கள் நடுவினின்று வெளியே தள்ளினேன்.