Versions
TOV பின்பு அந்த ஊழியக்காரன் தன் எஜமானுடைய ஒட்டகங்களில் பத்து ஒட்டகங்களைத் தன்னுடனே கொண்டுபோனான்; தன் எஜமானுடைய சகலவித உச்சிதமான பொருள்களும் அவன் கையில் இருந்தன; அவன் எழுந்து புறப்பட்டுப்போய், மெசொப்பொத்தாமியாவிலே நாகோருடைய ஊரில் சேர்ந்து,
IRVTA பின்பு அந்த வேலைக்காரன் தன் எஜமானுடைய ஒட்டகங்களில் பத்து ஒட்டகங்களைத் தன்னோடு கொண்டுபோனான்; தன் எஜமானுடைய அனைத்துவகையான விலையுயர்ந்த பொருட்களும் அவனுடைய கையில் இருந்தன; அவன் எழுந்து புறப்பட்டுப்போய், ஆரம்நாரஹி ‡ மொசொப்பொத்தமிய நாகோருடைய ஊருக்கு வந்து,
ERVTA ஆபிரகாமின் வேலைக்காரன் பத்து ஒட்டகங்களோடு அங்கிருந்து புறப்பட்டான். அவன் தன்னோடு பலவித அழகான பரிசுப்பொருட்களையும் எடுத்து சென்றான். அவன் நாகோரின் நகரமான மெசொப் பொத்தாமியாவிற்குச் சென்றான்.
RCTA பின் தன் தலைவனுடைய மந்தையினின்று பத்து ஒட்டகங்களைக் கொண்டு போய், அவனுடைய எல்லாப் பொருட்களிலும் சிலவற்றை எடுத்துக் கொண்டு பயணமாகி, மெசொபொத்தாமியாவிலுள்ள நாக்கோர் நகரை நோக்கிச் சென்றான்.
ECTA பின் தம் தலைவரின் ஒட்டகங்களிலிருந்து பத்து ஒட்டகங்களை அவிழ்த்துக் கொண்டு, அவருக்குரிய எல்லாவற்றிலும் சிறந்தவற்றைத் தம் கையோடு எடுத்துக்கொண்டு மெசபொத்தாமியாவிலிருந்த நாகோர் நகர் நோக்கிப் புறப்பட்டுச் சென்றார்.