Versions
TOV அதற்கு அந்த ஊழியக்காரன்: அவ்விடத்துப் பெண் என் பின்னே இந்தத் தேசத்துக்கு வர மனதில்லாதிருந்தால், நீர் விட்டுவந்த தேசத்திற்குத்தானே உம்முடைய குமாரனை மறுபடியும் அழைத்துப்போகவேண்டுமோ என்று கேட்டான்.
IRVTA அதற்கு அந்த வேலைக்காரன்: “அந்த இடத்துப் பெண் என்னுடன் இந்தத் தேசத்திற்கு வர விருப்பமில்லாமல் இருந்தால், நீர் விட்டுவந்த தேசத்திற்கு உம்முடைய மகனை மறுபடியும் அழைத்துப்போகவேண்டுமோ”? என்று கேட்டான்.
ERVTA அதற்கு அந்த வேலைக்காரன், "ஒருவேளை அந்தப் பெண் இந்த நாட்டிற்கு என்னோடு வர மறுக்கலாம். எனவே உங்கள் மகனையும் என்னோடு நான் அழைத்துச் செல்லலாமா?" என்று கேட்டான்.
RCTA அதற்கு ஊழியன்: சிலவேளை பெண் என்னோடு இந்நாட்டிற்கு வர மனமில்லாதவளானால், தாங்கள் விட்டு வந்த அந்நாட்டிற்குத் தங்கள் மகனைக் கூட்டிக் கொண்டு போகலாமா? என்று கேட்க, ஆபிரகாம்:
ECTA அதற்கு அவர், "ஒரு வேளை பெண் என்னோடு இந்நாட்டிற்கு வர மறுத்து விட்டால் தாங்கள் விட்டுவந்த அந்நாட்டிற்குத் தங்கள் மகனைக் கூட்டிக் கொண்டு போகலாமா?" என்று கேட்டார்.