Versions
TOV யோசேப்பு அவர்களைக் குறித்துத் தான் கண்ட சொப்பனங்களை நினைத்து, அவர்களை நோக்கி: நீங்கள் வேவுகாரர், தேசம் எங்கே திறந்து கிடக்கிறது என்று பார்க்க வந்தீர்கள் என்றான்.
IRVTA யோசேப்பு அவர்களைக் குறித்துத் தான் கண்ட கனவுகளை நினைத்து, அவர்களை நோக்கி: “நீங்கள் உளவாளிகள், தேசம் எங்கே திறந்துகிடக்கிறது என்று பார்க்க வந்தீர்கள்” என்றான்.
ERVTA அவன் தன் சகோதரர்களைப் பற்றி தான் கண்ட கனவை நினைத்துப் பார்த்தான். ஒற்றர்கள் என அழைத்தல் யோசேப்பு அவர்களிடம், "நீங்கள் உணவுப் பொருட்கள் வாங்க வரவில்லை, நீங்கள் ஒற்றர்கள். எங்கள் நாட்டின் பலவீனத்தைத் தெரிந்து கொள்ள வந்திருக்கிறீர்கள்" என்றான்.
RCTA ஆகையால், தாம் முன்பு கண்ட கனவுகளை நினைவுகூர்ந்து அவர்களை நோக்கி: நீங்கள் ஒற்றர்கள். நாடு எங்கே வலுவிழந்து இருக்கிறதென்று பார்க்க வந்திருக்கிறீர்கள் என்றார்.
ECTA அப்பொழுது தாம் அவர்களைப் பற்றிக் கண்ட கனவுகளை நினைவில் கொண்டு, அவர்களை நோக்கி, "நீங்கள் ஒற்றர்கள்; பாதுகாப்பாற்ற பகுதிகள் நாட்டில் எங்குள்ளன என்று ஆராய்ந்து பார்க்க வந்திருக்கிறீர்கள்" என்றார்.