Versions
TOV நாங்கள் தங்கும் இடத்தில் போய் எங்கள் சாக்குகளைத் திறந்தபோது, நாங்கள் நிறுத்துக்கொடுத்த நிறையின்படியே அவனவன் பணம் அவனவன் சாக்கின் வாயிலே இருக்கக் கண்டோம்; அதை நாங்கள் திரும்பவும் எங்கள் கையிலே கொண்டுவந்திருக்கிறோம்.
IRVTA நாங்கள் தங்கும் இடத்தில் போய் எங்களுடைய சாக்குகளைத் திறந்தபோது, நாங்கள் நிறுத்துக்கொடுத்த நிறையின்படியே அவனவன் பணம் அவனவன் சாக்கிலே இருந்ததைக் கண்டோம்; அதை நாங்கள் திரும்பவும் கொண்டுவந்திருக்கிறோம்.
ERVTA (21-22) வீட்டிற்குத் திரும்பும்போது வழியில் பைக்குள் பணம் இருப்பதைப் பார்த்தோம். அதற்குள் எவ்வாறு வந்தது என்று எங்களுக்குப் புரியவில்லை. ஆனால் அந்தப் பணத்தைத் திருப்பிக் கொடுக்க கொண்டு வந்திருக்கிறோம். இந்த முறை உணவுப் பொருள் வாங்குவதற்கு அதிகப்படியான பணமும் கொண்டு வந்திருக்கிறோம்” என்றனர்.
RCTA அவற்றை வாங்கிக் கொண்டு சாவடி போய்ச் சேர்ந்து எங்கள் சாக்குகளைத் திறந்த போது, சாக்குகளின் வாயிலே பணம் இருக்கக் கண்டோம். அதே நிறையின்படி அதைத் திரும்பவும் கையோடு கொண்டு வந்திருக்கிறோம்.
ECTA திரும்பவும் வழியில் சாவடியில் எங்கள் கோணிப்பைகளைத் திறந்தபோது, பைகளின் வாயிலே நாங்கள் கொடுத்த பணம் அப்படியே இருக்கக் கண்டோம். அதே அளவு திரும்பவும் கையோடு கொண்டு வந்திருக்கிறோம்.