Versions
TOV அதற்கு அவன்: உங்களுக்குச் சமாதானம்; பயப்படவேண்டாம்; உங்கள் தேவனும் உங்கள் தகப்பனுடைய தேவனுமாயிருக்கிறவர் உங்கள் சாக்குகளில் அதை உங்களுக்குப் புதையலாகக் கட்டளையிட்டார்; நீங்கள் கொடுத்த பணம் என்னிடத்தில் வந்து சேர்ந்தது என்று சொல்லி, சிமியோனை வெளியே அழைத்து வந்து, அவர்களிடத்தில் விட்டான்.
IRVTA அதற்கு அவன்: “உங்களுக்குச் சமாதானம்; பயப்படவேண்டாம்; உங்கள் தேவனும் உங்கள் தகப்பனுடைய தேவனுமாயிருக்கிறவர் உங்கள் சாக்குகளில் அதை உங்களுக்குப் புதையலாகக் கட்டளையிட்டார்; நீங்கள் கொடுத்த பணம் என்னிடத்தில் வந்து சேர்ந்தது” என்று சொல்லி, சிமியோனை வெளியே அழைத்து வந்து, அவர்களிடத்தில் விட்டான்.
ERVTA ஆனால் வேலைக்காரனோ, "பயப்பட வேண்டாம், நம்புங்கள் உங்கள் தேவனும் உங்கள் தந்தையின் தேவனும் அந்தப் பணத்தை உங்கள் பைகளில் போட்டிருக்கலாம். கடந்த முறை தானியத்துக்கான பணத்தைக் கொடுத்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்" என்றான். பிறகு அவன் சிமியோனைச் சிறையிலிருந்து விடுவித்தான்.
RCTA அதற்கு அவன்: அமைதியாய் இருங்கள். அஞ்சாதீர்கள். உங்கள் கடவுளும் உங்கள் தந்தையின் கடவுளுமானவர் உங்கள் சாக்குகளில் அந்தப் பணத்தை வைத்திருப்பார். ஏனென்றால், நீங்கள் எனக்குக் கொடுக்க வேண்டிய பணத்தை நான் சரியாய்ப் பெற்றுக் கொண்டேன் என்று சொல்லி, சிமையோனை அழைத்து வந்து அவர்களிடம் விட்டான்.
ECTA அதற்கு அவன், "உங்களுக்கு அமைதி உண்டாகுக! அஞ்சவேண்டாம்! உங்கள் கடவுளும் உங்கள் தந்தையின் கடவுளுமானவர் உங்கள் கோணிப்பைகளில் அந்தப் பணத்தை உங்களுக்குப் புதையலாகத் தந்திருப்பார்! உங்கள் பணம் தான் என்னிடம் வந்ததே!" என்று சொல்லியபின், சிமியோனை அவர்களிடம் அழைத்து வந்தான்.