Versions
TOV நாசம் என்னும் சல்லடையிலே ஜாதிகளை அரிக்கும்படிக்கு அவர் ஊதும் சுவாசம் கழுத்துமட்டும் எட்டுகிற ஆற்றுவெள்ளத்தைப்போலவும், ஜனங்களுடைய வாயிலே போட்டு அலைக்கழிக்கிற கடிவாளத்தைப்போலவும் இருக்கும்.
IRVTA நாசம் என்னும் சல்லடையிலே தேசங்களை அரிப்பதற்கு அவர் ஊதும் சுவாசம் கழுத்துவரை எட்டுகிற ஆற்றுவெள்ளத்தைப்போலவும், மக்களுடைய வாயிலே போட்டு அலைக்கழிக்கிற கடிவாளத்தைப்போலவும் இருக்கும்.
ERVTA கர்த்தருடைய சுவாசமானது (ஆவி) கழுத்து மட்டும் எட்டுகிற ஆற்று வெள்ளத்தைப் போன்றுள்ளது. தேசங்களைக் கர்த்தர் நியாயந்தீர்ப்பார். இது ‘நாசம் என்னும் சல்லடையில்’ தேசங்களை அசைப்பது போல இருக்கும். கர்த்தர் அவர்களைக் கட்டுப்படுத்துவார். அது ஜனங்களின் வாயிலே போட்டு கட்டுப்படுத்துகிற கடிவாளத்தைப் போன்றிருக்கும்.
RCTA கழுத்து வரையில் உயர்ந்து எழும் வெள்ளம் போல் அவருடைய மூச்சானது எழுந்து வருகிறது; மக்களினங்களை ஒன்றுமில்லாமையாய் அழிக்கவும், பொய்யான வழியில் இட்டுச் செல்லும் கடிவாளத்தை மக்களின் வாயில் மாட்டவும் வருகிறது.
ECTA அவர் மூச்சு, கழுத்தளவு பாயும்வெள்ளம்போல வருகின்றது; அழிவு என்னும் சல்லடையில் மக்களினங்களைச் சலித்து வழிதவறச் செய்யும் கடிவாளத்தை மக்களின் வாயில் மாட்ட வருகின்றார்.