Versions
TOV கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று நீங்கள் சொல்லுமளவும், இதுமுதல் என்னைக் காணாதிருப்பீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
IRVTA கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் போற்றப்பட்டவர் என்று நீங்கள் சொல்லும்வரை, இதுமுதல் என்னைக் காணாதிருப்பீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். PE
ERVTA நான் உனக்கு உண்மையைச் சொல்கிறேன், ‘கர்த்தரின் பெயராலே வருகிறவருக்கு தேவனின் ஆசீர்வாதம் கிடைக்கட்டும்! அவர் வரவு நல்வரவு!’ என்று நீ கூறுகிறவரைக்கும் நீ என்னைக் காணமாட்டாய்" என்று இயேசு கூறினார்.
RCTA ஏனெனில், ' ஆண்டவர் பெயரால் வருகிறவர் வாழி ' என்று நீங்கள் கூறும்வரை இனி என்னைக் காணமாட்டீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்."
ECTA எனவே இதுமுதல், "ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசிபெற்றவர்!" என நீங்கள் கூறும்வரை என்னைக் காண மாட்டீர்கள் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்.