Versions
TOV பொல்லாப்புச் செய்ய அவர்கள் இரண்டு கைகளும் நன்றாய்க் கூடும்; அதிபதி கொடு என்கிறான்; நியாயாதிபதி கைக்கூலி கேட்கிறான்; பெரியவன் தன் துராசையைத் தெரிவிக்கிறான்; இவ்விதமாய்ப் புரட்டுகிறார்கள்.
IRVTA பொல்லாப்புச் செய்வதற்கு அவர்களுடைய இரண்டு கைகளும் ஒன்றாகச் சேரும்; அதிபதி கொடு என்கிறான்; நியாயாதிபதி கைக்கூலி கேட்கிறான்; பெரியவன் தன் தகாத ஆசையைத் தெரிவிக்கிறான்; இவ்விதமாகப் புரட்டுகிறார்கள்.
ERVTA ஜனங்கள் தங்களின் இரண்டு கைகளினால் தீமை செய்ய நல்லவர்களாக இருக்கிறார்கள். அதிகாரிகள் லஞ்சத்தைக் கேட்கிறார்கள். வழக்கு மன்றத்தில் தீர்ப்பை மாற்ற நீதிபதிகள் பணம் பெறுகிறார்கள். "முக்கியமான தலைவர்கள்" நல்லதும் நேர்மையானதுமான முடிவுகளைச் செய்கிறதில்லை. அவர்கள் எதை விரும்புகிறார்களோ அதைச் செய்வார்கள்.
RCTA அவர்கள் கைகள் தீமை செய்வதில் திறமை வாய்ந்தவை; தலைவனும் நீதிபதியும் கையூட்டுக் கேட்கின்றனர், பெரிய மனிதன் தன் உள்ளத்தின் தீய எண்ணத்தைச் சொல்லுகிறான்; அவ்வாறு அவர்கள் நாட்டைக் கெடுத்து விட்டார்கள்.
ECTA தீமை செய்வதில் அவர்கள் கைதேர்ந்தவர்கள்; தலைவனும் நீதிபதியும் கையூட்டுக் கேட்கின்றனர்; பெரிய மனிதர் தாம் விரும்பியதை வாய்விட்டுக் கூறுகின்றனர்; இவ்வாறு நெறிதவறி நடக்கின்றனர்.