Versions
TOV நீர் என்னிடத்திற்கு அனுப்பின ஸ்தானாபதிகளிடத்தில் நான் சொல்லவில்லையா?
IRVTA நீர் என்னிடத்திற்கு அனுப்பின தூதுவர்களிடத்தில் நான் சொல்லவில்லையா?
ERVTA பாலாக் தனது அழகான வீடு நிறைய வெள்ளியும் தங்கமும் எனக்குத்தரலாம். ஆனால் கர்த்தர் எதைச் சொல்லவேண்டும் என்று ஆனையிடுகிறாரோ அதை மட்டுமே சொல்வேன். நானாக எதையும் என்னால் செய்ய முடியாது. அது நன்மையோ அல்லது தீமையாகவோ இருக்கலாம். கர்த்தர் ஆணையிட்டபடியே நான் சொல்ல வேண்டும்’ என்றேன். நான் உன் ஆட்களிடம் கூறியதை நினைத்துப்பார்.
RCTA பாலாக் எனக்கு தன் வீடு நிறைய வெள்ளியும் பொன்னும் கொடுத்தாலும், என் விருப்பப்படி நன்மையேனும் தீமையேனும் வருவிக்க என் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளையை மீற என்னாலே கூடாது என்றும், ஆண்டவர் சொல்லிய எல்லாவற்றையும் சொல்வேன் என்றும் நான் சொன்னேனன்றோ? ஆயினும்,
ECTA பாலாக்கு வீடு நிறைய வெள்ளியும் பொன்னும் தந்தாலும் ஆண்டவரின் வார்த்தையை மீறிச் சென்று என் விருப்பப்படி நன்மையோ தீமையோ செய்ய இயலாது; ஆண்டவர் பேசுவதையே நான் பேசுவேன் என்று சொல்லவில்லையா? "