Versions
TOV கர்த்தர் அவர்கள்மேல் கெடியாயிருப்பார்; பூமியிலுள்ள தேவர்களையெல்லாம் மெலிந்துபோகப்பண்ணுவார்; அப்பொழுது தீவுகளிலுள்ள சகல புறஜாதிகளும் அவரவர் தங்கள் தங்கள் ஸ்தானத்திலிருந்து அவரைப் பணிந்துகொள்வார்கள்.
IRVTA யெகோவா அவர்கள்மேல் அதிகாரமுள்ளவராக இருப்பார்; பூமியிலுள்ள தேவர்களையெல்லாம் மெலிந்துபோகச்செய்வார்; அப்பொழுது தீவுகளிலுள்ள சகல அன்னியமக்களும் அவரவர் தங்கள் தங்கள் இடத்திலிருந்து அவரைப் பணிந்துகொள்வார்கள்.
ERVTA "அந்த ஜனங்கள் கர்த்தருக்கு அஞ்சுவார்கள். ஏனென்றால், கர்த்தர் அவர்களது தெய்வங்களை அழிப்பார். பிறகு தூரதேசங்களில் உள்ள ஜனங்கள் அனைவரும் கர்த்தரைத் தொழுதுகொள்வார்கள்.
RCTA ஆண்டவர் அவர்களுக்கு அச்சம் தருபவராய் இருப்பார்; மாநிலத்தின் எல்லாத் தெய்வங்களையும் அழித்துப் போடுவார்; மனிதர் அனைவரும் தத்தம் நாட்டில் அவரையே வணங்குவர், புறவினத்தாரின் தீவுகள் அனைத்தும் அவ்வாறே வணங்கும்.
ECTA ஆண்டவர் அவர்களை அச்சமுறச் செய்வார்; நாட்டின் தெய்வங்களை எல்லாம் ஆற்றல் குன்றிப்போகச் செய்வார். வேற்றினத்தார் அனைவரும் அவரவர்தம் தீவுகளில் இருந்து கொண்டு அவரையே வணங்குவர்.