Versions
TOV இப்பொழுதோ நீங்கள் தேவனை அறிந்திருக்க அல்லது தேவனாலே அறியப்பட்டிருக்க, பெலனற்றதும் வெறுமையானதுமான அவ்வழிபாடுகளுக்கு நீங்கள் மறுபடியும் திரும்பி, மறுபடியும் அவைகளுக்கு அடிமைப்படும்படி விரும்புகிறதெப்படி?
IRVTA இப்பொழுதோ நீங்கள் தேவனை அறிந்திருக்க அல்லது தேவனாலே அறியப்பட்டிருக்க, பெலன் இல்லாததும் வெறுமையானதுமான அந்த வழிபாடுகளுக்கு நீங்கள் மீண்டும் திரும்பி, மீண்டும் அவைகளுக்கு அடிமைகளாவதற்கு விரும்புகிறது ஏன்?
ERVTA ஆனால் இப்போது நீங்கள் உண்மையான தேவனை அறிந்து கொண்டீர்கள். உண்மையில் அவர் உங்களை அறிந்து கொண்ட தேவன். எனவே எதற்காக நீங்கள் மறுபடியும் அந்தப் பலவீனமான, மோசமான ஆவிகளுக்கு அடிமைகளாக விரும்புகிறீர்கள்.
RCTA ஆனால், இப்பொழுது கடவுளை அறிந்து ஏற்றுக் கொண்டீர்கள்; சரியாய்ச் சொல்லவேண்டுமாயின், இப்பொழுது கடவுளே உங்களை அறிந்து ஏற்றுக்கொண்டிருக்கிறார்; அப்படியிருக்க வலுவற்ற வறுமை மிக்க உலகப் பூதங்களிடம் திரும்பிப் போய், அவற்றிற்கு மறுபடியும் அடிமைகளாவதற்கு நீங்கள் விரும்புவதெப்படி?
ECTA ஆனால் இப்பொழுது நீங்கள் கடவுளை ஏற்றுக்கொண்டிருக்கிறீர்கள்; உண்மையில், கடவுளே உங்களை ஏற்றுக்கொண்டிருக்கிறார். அப்படியிருக்க வலுவற்றவையும் வறியவையுமான பஞ்சபூதங்களிடம் திரும்பிப் போய் அவற்றுக்கு மீண்டும் அடிமைகள் ஆவதற்கு நீங்கள் விரும்புவது ஏன்?