Versions
TOV அவர் யாக்கோபிலே சாட்சியை ஏற்படுத்தி, இஸ்ரவேலிலே வேதத்தை ஸ்தாபித்து, அவைகளைத் தங்கள் பிள்ளைகளுக்கு அறிவிக்கும்படி நம்முடைய பிதாக்களுக்குக் கட்டளையிட்டார்.
IRVTA அவர் யாக்கோபிலே சாட்சியை ஏற்படுத்தி,
இஸ்ரவேலிலே வேதத்தை நிறுவி,
அவைகளைத் தங்களுடைய பிள்ளைகளுக்கு அறிவிக்கும்படி
நம்முடைய முற்பிதாக்களுக்குக் கட்டளையிட்டார்.
ERVTA கர்த்தர் யாக்கோபோடு ஒரு உடன்படிக்கையைச் செய்தார். தேவன் இஸ்ரவேலருக்குச் சட்டத்தை (நீதிமுறையை) கொடுத்தார். நம் முற்பிதாக்களுக்கு தேவன் கட்டளைகளை அளித்தார். தமது பின் சந்ததியினருக்கு அந்தச் சட்டங்களைப் போதிக்குமாறு அவர் நம் முற்பிதாக்களுக்குக் கூறினார்.
RCTA யாக்கோபின் இனத்தாருக்குக் கட்டளையொன்று ஏற்படுத்தினார்; இஸ்ராயேல் மக்களுக்குச் சட்டம் ஒன்றைப் பிறப்பித்தார். நம் முன்னோர்களுக்குக் கட்டளையிட்டதை அவர்கள் மக்களுக்கு அறிவிக்க வேண்டுமென்பதே அவர் தந்த சட்டம்.
ECTA யாக்கோபுக்கென அவர் நியமங்களை வகுத்தார்; இஸ்ரயேலுக்கெனத் திருச்சட்டத்தை ஏற்படுத்தினார்; இதனையே தம் பிள்ளைகளுக்கும் கற்பிக்குமாறு நம் மூதாதையர்க்கு அவர் கட்டளையிட்டார்.