Versions
TOV அதிபதிகளும் சேவகரும் உமக்கு அற்பமானவர்கள் என்று இன்று விளங்கப்பண்ணுகிறீர்; அப்சலோம் உயிரோடிருந்து, நாங்கள் அனைவரும் இன்று செத்துப்போனால், அப்பொழுது உம்முடைய பார்வைக்கு நலமாயிருக்கும் என்று இன்று அறிந்துகொண்டேன்.
IRVTA தளபதிகளும், வீரர்களும் உமக்கு அற்பமானவர்கள் என்று இன்று விளங்கச்செய்கிறீர்; அப்சலோம் உயிரோடிருந்து, நாங்கள் அனைவரும் இன்று இறந்துபோனால், அப்பொழுது உம்முடைய பார்வைக்கு நலமாக இருக்கும் என்று இன்று அறிந்துகொண்டேன்.
ERVTA உங்களைப் பகைக்கிறவர்களை நீர் நேசிக்கிறீர். உங்களை நேசிக்கிறவர்களை நீர் வெறுக்கிறீர். உங்கள் அதிகாரிகளும் உங்கள் வீரர்களும் உங்களுக்கு ஒரு பொருட்டல்ல என்பதை இன்று வெளிப்படுத்திவிட்டீர்கள். அப்சலோம் உயிரோடிருந்து, நாங்கள் அனைவரும் கொல்லப்பட்டிருந்தால் நீர் மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்பீர் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது!
RCTA நீர் உம்மைப் பகைக்கிறவர்களுக்கு அன்பு செய்து, உமக்கு அன்பு செய்கிறவர்களைப் பகைக்கிறீரே; உம் படைத்தலைவர்களையும் ஏவலர்களையும் நீர் பொருட்படுத்துவதில்லை என்று இன்று காட்டிவிட்டீரே! இன்று அப்சலோம் வாழ நாங்கள் அனைவரும் மடிந்திருந்தாலும் அதுவே உம் மனத்திற்குப் பிடித்திருந்திருக்கும் என்று நான் இப்போது அறிந்து கொண்டேன்.
ECTA உம்மை வெறுப்பவனுக்கு அன்பு செலுத்தி, உமக்கு அன்பு செலுத்துபவர்களை நீ வெறுப்பதால், படைத் தலைவர்களோ பணியாளர்களோ உமக்கு ஒரு பொருட்டில்லை என்பதை எடுத்துக்காட்டிவிட்டீர். இன்று அப்சலோம் உயிரோடு இருந்து, நாங்கள் அனைவருமே மடிந்திருந்தால் உமக்கு அது பிடித்திருக்கும் என்பதையும் நான் இன்று புரிந்து கொண்டேன்.