Bible Versions
Bible Books

Lamentations 1:12 (KJV) King James Version

Versions

TOV   வழியில் நடந்துபோகிற சகல ஜனங்களே, இதைக்குறித்து உங்களுக்குக் கவையில்லையா? கர்த்தர் தமது உக்கிரமான கோபமூண்ட நாளிலே என்னைச் சஞ்சலப்படுத்தினதினால் எனக்கு உண்டான என் துக்கத்துக்குச் சரியான துக்கம் உண்டோ என்று என்னை நோக்கிப்பாருங்கள்.
IRVTA   வழியில் நடந்துபோகிற அனைத்து மக்களே,
இதைக்குறித்து உங்களுக்குக் கவலையில்லையா?
யெகோவா தாம் மிகவும் கோபப்பட்ட நாளிலே என்னை வருத்தப்படுத்தியதால்
எனக்கு ஏற்பட்ட என் துக்கத்திற்குச் சரியான துக்கம் உண்டோ என்று என்னை நோக்கிப்பாருங்கள்.
ERVTA   சாலை வழியாகக் கடந்து செல்லும் ஜனங்களே, நீங்கள் எனக்காக கவலைப்படுகின்றவர்களாக தெரியவில்லை. ஆனால் என்னைப் பாருங்கள். எனது வலியைப்போன்று வேறுவலி உண்டோ? எனக்கு வந்திருக்கிற வலியைப்போன்று வேறுவலி இருக்கிறதா? கர்த்தர் என்னைத் தண்டித்திருக்கிறது போன்றவலி வேறு உள்ளதோ? அவர் தனது பெருங்கோபமான நாளில் என்னைத் தண்டித்திருக்கிறார்.
RCTA   லாமேத்: "இவ்வழியாய்க் கடந்து செல்வோரே, நீங்கள் அனைவரும் நின்று பாருங்கள்: என்னை வாதிக்கும் துயருக்கொப்பாய் வேறேதேனும் துயருண்டோ? அந்தத் துயரை ஆண்டவரே- தம் பெருங் கோபத்தின் நாளில் எனக்குத் தந்தார்.
ECTA   இவ்வழியாய்க் கடந்து செல்வோரே! உங்களுக்குக் கவலை இல்லையா? அனைவரும் உற்றுப் பாருங்கள்! எனக்கு வந்துற்ற துயர்போல வேறேதும் துயர் உண்டோ? ஆண்டவர் தம் வெஞ்சின நாளில் என்னைத் துன்பத்திற்கு உள்ளாக்கினர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us