Bible Versions
Bible Books

2 Kings 6:12 (LXXRP) Septugine Greek Old Testament with Grammar and Strong Code

Versions

TOV   அப்பொழுது அவன் ஊழியக்காரரில் ஒருவன்: அப்படியில்லை; என் ஆண்டவனாகிய ராஜாவே, நீர் உம்முடைய பள்ளி அறையிலே பேசுகிற வார்த்தைகளையும் இஸ்ரவேலிலிருக்கிற தீர்க்கதரிசியாகிய எலிசா இஸ்ரவேலின் ராஜாவுக்கு அறிவிப்பான் என்றான்.
IRVTA   அப்பொழுது அவனுடைய அதிகாரிகளில் ஒருவன்: அப்படியில்லை; என் எஜமானாகிய ராஜாவே, நீர் உம்முடைய படுக்கையறையிலே பேசுகிற வார்த்தைகளையும் இஸ்ரவேலிலிருக்கிற தீர்க்கதரிசியாகிய எலிசா இஸ்ரவேலின் ராஜாவிற்கு அறிவிப்பான் என்றான்.
ERVTA   ஒரு அதிகாரி, "எங்கள் அரசனும் ஆண்டவனுமானவரே! நம்மில் எவரும் ஒற்றராகவில்லை. நீங்கள் உங்களுடைய படுக்கையறையில் பேசுகின்ற பல இரகசியங்களையுங் கூட, இஸ்ரவேலில் இருந்துவந்த தீர்க்கதரிசி எலிசாவால் இஸ்ரவேல் அரசனிடம் சொல்ல முடியும்!" என்றான்.
RCTA   அதற்கு அலுவலரில் ஒருவன் அவனை நோக்கி, "என் அரசரான தலைவ, அப்படி ஒருவனும் இங்கு இல்லை. ஆனால் இஸ்ராயேலில் இருக்கும் எலிசேயு என்ற இறைவாக்கினர் தாங்கள் ஆலோசனைக் கூடத்தில் சொல்லும் அனைத்தையும் இஸ்ராயேல் அரசனுக்கு வெளிப்படுத்தி விடுகின்றார்" என்றான்.
ECTA   பணியாளருள் ஒருவன் அவனை நோக்கி, "என் தலைவரான அரசே! அப்படி ஒருவனும் இங்கில்லை. ஆனால், இஸ்ரயேலில் இருக்கும் எலிசா என்ற இறைவாக்கினர் தாங்கள் பள்ளியறையில் பேசுவதைக்கூடத் தம் அரசனுக்கு வெளிப்படுத்தி விடுகிறார்" என்றான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us