Bible Versions
Bible Books

Amos 8:12 (LXXRP) Septugine Greek Old Testament with Grammar and Strong Code

Versions

TOV   அப்பொழுது அவர்கள் கர்த்தருடைய வசனத்தைத் தேட ஒரு சமுத்திரந்தொடங்கி மறு சமுத்திரமட்டும், வடதிசைதொடங்கிக் கீழ்த்திசைமட்டும் அலைந்து திரிந்தும் அதைக் கண்டடையாமற் போவார்கள்.
IRVTA   அப்பொழுது அவர்கள் யெகோவாவுடைய வசனத்தைத் தேட ஒரு சமுத்திரம் துவங்கி மறு சமுத்திரம்வரை, வடக்குதிசை துவங்கிக் கிழக்குத்திசைவரை அலைந்து திரிந்தும் அதைக் கண்டடையாமல்போவார்கள்.
ERVTA   ஜனங்கள் சவக்கடலிலிருந்து மத்தியத் தரை கடலுக்கும் வடக்கிலிருந்து கிழக்குக்கும் அலைவார்கள். ஜனங்கள் கர்த்தருடைய வார்த்தைகளுக்காக அங்கும் இங்கும் அலைவார்கள். ஆனால் அவர்கள் அதைக் கண்டு கொள்ளமாட்டார்கள்.
RCTA   ஒரு கடல் முதல் இன்னொரு கடல் வரைக்கும் வடதிசை முதல் கீழ்த்திசை வரை தேடியலைந்து அங்குமிங்கும் தள்ளாடி ஆண்டவரின் வார்த்தையைத் தேடுவார்கள்; ஆனால் அவர்கள் அதைக் கண்டடைய மாட்டார்கள்.
ECTA   ஒரு கடல் முதல் மறு கடல்வரை, வடதிசை முதல் கீழ்த்திசைவரை தேடிச் சென்று அங்குமிங்கும் தள்ளாடி அலைந்து ஆண்டவரின் வாக்கைத் தேடுவார்கள். ஆனால், அதைக் கண்டடையமாட்டார்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us