Versions
TOV நான் இந்தக் காரியத்தை உபமானமாய்ப் பேசுகிறதற்கு உமது அடியானாகிய யோவாப் அதற்குக் காரணமாயிருந்தான்; ஆனாலும் தேசத்தில் நடக்கிறதையெல்லாம் அறிய, என் ஆண்டவனுடைய ஞானம் தேவதூதனுடைய ஞானத்தைப் போல் இருக்கிறது என்றாள்.
IRVTA நான் இந்தக் காரியத்தை விளக்கிப் பேசுவதற்கு உமது அடியானாகிய யோவாப் அதற்குக் காரணமாக இருந்தான்; ஆனாலும் தேசத்தில் நடக்கிறதையெல்லாம் அறிய, என் ஆண்டவனுடைய ஞானம் தேவதூதனுடைய ஞானத்தைப்போல் இருக்கிறது என்றாள்.
ERVTA நடந்த காரியங்களை நீர் வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்ப்பதற்காக யோவாப் இவற்றைச் செய்தார். என் ஆண்டவனே, நீர் தேவதூதனைப் போன்ற ஞானம் உள்ளவர்! உமக்கு இப்பூமியில் நடப்பவையெல்லாம் தெரியும்" என்றாள்.
RCTA நான் இவ்வார்த்தைகளை உவமையாய்ச் சொல்ல வேண்டும் என்று உம் ஊழியன் யோவாப் கட்டளையிட்டான். ஆயினும் இவ்வுலகில் உள்ளவற்றை எல்லாம் நீர் அறிந்திருக்கிறீரே! ஏனெனில், என் தலைவராகிய அரசே, கடவுளின் தூதனைப் போல் நீர் ஞானம் நிறைந்தவராய் இருக்கிறீர்" என்றாள்.
ECTA உம் அடியான் யோவாபு தற்போதைய நிலை மாற வேண்டுமென இதைச் செய்தார். ஆனால் கடவுளின் தூதருக்கு நிகரான பேரறிவு கொண்ட என் தலைவர் உலகில் நடக்கும் அனைத்தையும் அறிவார்" என்று அப்பெண் கூறினாள்.