Versions
TOV தன் சகோதரரைப் பார்த்து, என் பணம் திரும்ப வந்திருக்கிறது; இதோ, அது என் சாக்கிலே இருக்கிறது என்றான். அப்பொழுது அவர்களுடைய இருதயம் சோர்ந்துபோய், அவர்கள் பயந்து, ஒருவரை ஒருவர் பார்த்து, தேவன் நமக்கு இப்படிச் செய்தது என்ன என்றார்கள்.
IRVTA தன் சகோதரர்களைப் பார்த்து, “என் பணம் திரும்ப வந்திருக்கிறது; இதோ, அது என் சாக்கிலே இருக்கிறது என்றான். அப்பொழுது அவர்களுடைய இருதயம் சோர்ந்துபோய், அவர்கள் பயந்து, ஒருவரை ஒருவர் பார்த்து, “தேவன் நமக்கு இப்படிச் செய்தது” என்ன என்றார்கள்.
ERVTA அவன் மற்ற சகோதரர்களிடம், "பாருங்கள். இங்கே பணம் இருக்கிறது. நான் தானியத்துக்குப் பணம் கொடுத்தேன். ஆனால் பணம் என் பையில் திரும்பப் போடப்பட்டிருக்கிறது" என்றான். அவர்கள் பயந்தார்கள், "தேவன் நமக்கு என்ன செய்கிறார்?" என்று ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டனர்.
RCTA என் பணம் திரும்ப வைக்கப்பட்டுள்ளது; இதோ சாக்கிலே இருக்கிறது என்றான். அவர்களோ திடுக்கிட்டு மயங்கிக் கலங்கி, ஒருவரோடொருவர்: கடவுள் நமக்கு இவ்வாறு செய்திருப்பது என்னவோ என்றனர்.
ECTA அவன் தன் சகோதரரை நோக்கி, "என் பணம் திருப்பித் தரப்பட்டுள்ளது; இதோ என் கோணியில் இருக்கிறது" என்றான். அவர்களோ மனக்கலக்கமுற்று, நடுநடுங்கி, ஒருவரோடொருவர், "கடவுள் நமக்கு இப்படிச் செய்தது ஏன்?" என்றனர்.