Bible Versions
Bible Books

Genesis 42:7 (NCV) New Century Version

Versions

TOV   யோசேப்பு அவர்களைப் பார்த்து, தன் சகோதரர் என்று அறிந்துகொண்டான்; அறிந்தும் அறியாதவன்போலக் கடினமாய் அவர்களோடே பேசி: நீங்கள் எங்கேயிருந்து வந்தீர்கள் என்று கேட்டான்; அதற்கு அவர்கள்: கானான் தேசத்திலிருந்து தானியம் கொள்ள வந்தோம் என்றார்கள்.
IRVTA   யோசேப்பு அவர்களைப் பார்த்து, தன் சகோதரர்கள் என்று தெரிந்துகொண்டான்; தெரிந்தும் தெரியாதவன்போலக் கடினமாக அவர்களோடு பேசி: “நீங்கள் எங்கேயிருந்து வந்தீர்கள்” என்று கேட்டான்; அதற்கு அவர்கள்: “கானான் தேசத்திலிருந்து தானியம் வாங்கவந்தோம்” என்றார்கள்.
ERVTA   யோசேப்பு தன் சகோதரர்களைப் பார்த்ததும், உடனே அடையாளம் கண்டு கொண்டான். எனினும் தெரிந்துகொண்டதைப் போல் காட்டிகொள்ளாமல் அவர்களிடம் கடுமையாக நடந்து கொண்டான். "எங்கேயிருந்து வருகின்றீர்கள்?" என்று கேட்டான். அவர்கள், "நாங்கள் கானான் பகுதியிலிருந்து வருகிறோம். உணவுப் பொருட்களை வாங்குவதற்காக வந்தோம்" என்றனர்.
RCTA   அவர் அவர்களை இன்னொரென்று தெரிந்து கொண்டார். ஆயினும்; அறியாதவரைப் போல் மிகக் கடுமையுடன் அவர்களோடு பேசி: நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்று வினவினார். அவர்கள்: கானான் நாட்டிலிருந்து உயிர் பிழைக்கத் தேவையான உணவுப் பொருட்கள் வாங்கும்படியாக வந்தோம் என்று மறுமொழி கூறினர்.
ECTA   யோசேப்பு தம் சகோதரர்களை அடையாளம் கண்டுகொண்டார். ஆயினும் அவர்களை அறியாதவர்போல் கடுமையாக அவர்களிடம் பேசி, "நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?" என்று வினவினார். அவர்களோ, "நாங்கள் கானான் நாட்டிலிருந்து உணவுப் பொருள்கள் வாங்க வந்திருக்கிறோம்" என்று பதில் கூறினார்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us