Bible Versions
Bible Books

Daniel 4:14 (TOV) Tamil Old BSI Version

Versions

TOV   அவன் உரத்த சத்தமிட்டு: இந்த விருட்சத்தை வெட்டி, இதின் கொப்புகளைத் தறித்துப்போடுங்கள்; இதின் இலைகளை உதிர்த்து, இதின் கனிகளைச் சிதறடியுங்கள்; இதின் கீழுள்ள மிருகங்களும் இதின் கொப்புகளிலுள்ள பட்சிகளும் போய்விடட்டும்.
IRVTA   அவன் உரத்த சத்தமிட்டு: இந்த மரத்தை வெட்டி, இதின் கிளைகளை வெட்டிப்போடுங்கள்; இதின் இலைகளை உதிர்த்து, இதின் பழங்களைச் சிதறடியுங்கள்; இதின் கீழுள்ள மிருகங்களும் இதின் கிளைகளிலுள்ள பறவைகளும் போய்விடட்டும்.
ERVTA   அவன் உரத்தகுரலில்: "மரத்தை வெட்டிப்போடுங்கள். அதன் கிளைகளை வெட்டிப் போடுங்கள். அதன் இலைகளை உதிர்த்துவிடுங்கள். அதன் பழங்களைச் சிதறடியுங்கள். அம்மரத்தின் அடியிலுள்ள மிருகங்கள் ஓடிப்போகும். அதன் கிளைகளில் உள்ள பறவைகள் பறந்துபோகும்.
RCTA   (11) அவர் தமது குரலையுயர்த்திக் கூவியது இதுவே: 'இந்த மரத்தை வெட்டுங்கள், கிளைகளைத் தறித்துப் போடுங்கள்; இதன் இலைகளையெல்லாம் பறித்தெறியுங்கள், கனிகளைச் சிதறடியுங்கள்; இதன் கீழ் வாழும் மிருகங்கள் ஓடிப் போகட்டும், இதன் கிளைகளில் தங்கிய பறவைகள் பறந்தோடட்டும்.
ECTA   அவர் தமது குரலை உயர்த்திக் கூறியது இதுவே; இந்த மரத்தை வெட்டுங்கள்; கிளைகளைத் தறித்து விடுங்கள்; இதன் இலைகளை எல்லாம் பறித்தெறியுங்கள்; இதன் கனிகளைச் சிதறடியுங்கள்; இதன் கீழ் வாழும் விலங்குகள் ஓடிப்போகட்டும்; இதன் கிளைகளில் தங்கிய பறவைகள் பறந்தோடட்டும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us