Bible Versions
Bible Books

Daniel 4:9 (TOV) Tamil Old BSI Version

Versions

TOV   சாஸ்திரிகளின் அதிபதியாகிய பெல்தெஷாத்சாரே, பரிசுத்த தேவர்களுடைய ஆவி உனக்குள் இருக்கிறதென்றும், எந்த மறைபொருளையும் அறிவது உனக்கு அரிதல்லவென்றும் நான் அறிவேன்; நான் கண்ட என் சொப்பனத்தின் தரிசனங்களையும் அதின் அர்த்தத்தையும் சொல்லு.
IRVTA   ஞானிகளின் அதிபதியாகிய பெல்தெஷாத்சாரே, பரிசுத்த தேவர்களுடைய ஆவி உனக்குள் இருக்கிறதென்றும், எந்த மறைபொருளையும் அறிவது உனக்கு கடினமல்லவென்றும் நான் அறிவேன்; நான் கண்ட என் கனவின் தரிசனங்களையும் அதின் அர்த்தத்தையும் சொல்.
ERVTA   "பெல்தெஷாத்சார், நீ சாஸ்திரிகளிலேயே மிகவும் முக்கியமானவன். உன்னிடம் பரிசுத்த தெய்வங்களின் ஆவி இருப்பதை நான் அறிவேன். உன்னால் புரிந்துகொள்ள முடியாத கடுமையான இரகசியம் இல்லை என்பதை அறிவேன். நான் கண்ட கனவு இதுதான். என்னிடம் இதன் பொருள் என்னவென்று சொல்.
RCTA   (6) ஞானிகளின் தலைவராகிய பல்தசாரே, பரிசுத்த தெய்வங்களின் ஆவி உம்மிடம் நிறைந்துள்ளது என்றும், எந்த மறைபொளையும் அறிவது உமக்குக் கடினமன்று என்றும் நான் அறிந்திருக்கிறேன்; நான் கண்ட கனவில் தோன்றிய காட்சிகளையும், அவற்றின் உட்பொருளையும் விளக்குக!
ECTA   "மந்திரவாதிகளின் தலைவராகிய பெல்தசாச்சார்! புனிதமிகு கடவுளின் ஆவி உம்மிடம் உள்ளது என்பதையும், உம்மால் விளக்கமுடியாத மறைபொருள் எதுவுமில்லை என்பதையும் நான் அறிவேன். நான் கனவில் கண்ட காட்சி இதுதான்; அதன் உட்பொருளை விளக்கிக் கூறுவீர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us