Bible Versions
Bible Books

Jeremiah 51:25 (TOV) Tamil Old BSI Version

Versions

TOV   இதோ, பூமியை எல்லாம் கெடுக்கிற கேடான பர்வதமே, நான் உனக்கு விரோதமாக வந்து, என் கையை உனக்கு விரோதமாக நீட்டி, உன்னைக் கன்மலைகளிலிருந்து உருட்டி, உன்னை எரிந்துபோன பர்வதமாக்கிப்போடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
IRVTA   இதோ, பூமியை எல்லாம் கெடுக்கிற கேடான பர்வதமே, நான் உனக்கு விரோதமாக வந்து, என் கையை உனக்கு விரோதமாக நீட்டி, உன்னைக் கன்மலைகளிலிருந்து உருட்டி, உன்னை எரிந்துபோன பர்வதமாக்கிப்போடுவேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
ERVTA   கர்த்தர் கூறுகிறார்: "பாபிலோனே, நீ ஒரு அழிக்கும் மலை. நான் உனக்கு எதிராக இருக்கிறேன். பாபிலோனே, முழு நாட்டையும் அழித்துவிட்டாய். நான் உனக்கு எதிராக இருக்கிறேன். நான் எனது கையை உனக்கு எதிராக வைப்பேன். நான் உன்னைக் கன்மலையிலிருந்து உருட்டுவேன். நான் உன்னை எரிந்துப்போன மலையாக்குவேன்.
RCTA   நாசம் விளைவிக்கும் மலையே, இதோ, நாம் உனக்கு விரோதமாய் வருகின்றோம்; நீ உலக முழுவதையும் அழிக்கின்றாயே, உனக்கெதிராய் நாம் நம் கைகளை நீட்டுவோம்; உன்னைப் பாறைகளினின்று உருட்டி விடுவோம், உன்னை எரிந்து விட்ட மலையாக்குவோம், என்கிறார் ஆண்டவர்.
ECTA   அழிவைக் கொணரும் மலையே, மண்ணுலகு முழுவதையும் அழிப்பவனே, நான் உனக்கு எதிராய் இருப்பேன், என்கிறார் ஆண்டவர். நான் உனக்கு எதிராய் என் கையை நீட்டுவேன்; உன்னைப் பாறை முகடுகளினின்று உருட்டிவிடுவேன்; உன்னை எரிந்துபோன மலை ஆக்குவேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us