Bible Versions
Bible Books

Lamentations 1:15 (TOV) Tamil Old BSI Version

Versions

TOV   என்னிலுள்ள பராக்கிரமசாலிகளாகிய என்னுடையவர்களெல்லாரையும் ஆண்டவர் மிதித்துப்போட்டார்; என் வாலிபரை நொறுக்கும்படி எனக்கு விரோதமாய் ஒரு கூட்டத்தை வரவழைத்தார்; திராட்சப்பழத்தை ஆலையில் மிதிக்கிறதுபோல, ஆண்டவர் யூதா குமாரத்தியாகிய கன்னிகையை மிதித்தார்.
IRVTA   என்னிடத்திலுள்ள பலசாலிகளாகிய எனக்குரிய அனைவரையும் ஆண்டவர் மிதித்துப்போட்டார்;
என் வாலிபர்களை நொறுக்குவதற்காக எனக்கு விரோதமாக ஒரு கூட்டத்தை வரவழைத்தார்;
திராட்சைப்பழத்தை ஆலையில் மிதிக்கிறதுபோல,
ஆண்டவர், மகளாகிய யூதா என்னும் இளம்பெண்ணை மிதித்தார்.
ERVTA   "கர்த்தர் எனது பலமான படை வீரர்களை மறுத்துவிட்டார். அவ்வீரர்கள் நகரத்திற்குள்ளே இருந்தனர். பிறகு கர்த்தர் ஒரு ஜனக்குழுவை எனக்கு எதிராக கொண்டு வந்தார். என்னுடைய இளம் வீரர்களைக் கொல்வதற்காக அவர்களைக் கொண்டு வந்தார். கர்த்தர் ஆலைக்குள்ளே திராட்சைப் பழங்களை மிதிப்பதுபோல யூதா குமாரத்தியாகிய கன்னிகையை மிதித்தார்.
RCTA   சாமேக்: "திறமை மிக்க வீரர் அனைவரையும், ஆண்டவர் என்னிடமிருந்து எடுத்து விட்டார். இளங்காளைகளை அழிக்க எனக்கெதிராய் மாபெரும் கூட்டத்தை வரச் செய்தார்; திராட்சை ஆலையில் மிதிப்பது போலக் கன்னிப் பெண் யூதாவை ஆண்டவர் மிதித்தார்.
ECTA   என் தலைவர் என்னிடமுள்ள வலியோர் அனைவரையும் அவமதித்தார்; என் இளைஞரை அடித்து நொறுக்க அவர் எனக்கு எதிராக ஒரு கூட்டத்தை வரவழைத்தார்; மகள் யூதாவாகிய கன்னியை, ஆலையில் திராட்சைப் பழத்தைப் பிழிவதுபோல, என் தலைவர் கசக்கிப் பிழிந்தார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us