Versions
TOV என்னைச் சிநேகித்தவர்களைக் கூப்பிட்டேன், அவர்களோ என்னை மோசம்போக்கினார்கள்; என் ஆசாரியர்களும் என் மூப்பர்களும் தங்கள் உயிரைக் காப்பாற்றத் தங்களுக்கு அப்பந்தேடுகையிலே நகரத்தில் மூச்சொடுங்கி மாண்டார்கள்.
IRVTA என்னைச் சிநேகித்தவர்களைக் கூப்பிட்டேன்,
அவர்களோ எனக்கு துரோகம் செய்தார்கள்;
என் ஆசாரியர்களும் என் மூப்பர்களும் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ளத்
தங்களுக்கு ஆகாரம் தேடும்போது நகரத்தில் மூச்சு அடங்கி இறந்துபோனார்கள்.
ERVTA நான் எனது நேசர்களை கூப்பிட்டேன். ஆனால் அவர்கள் என்னை மோசம் பண்ணினார்கள். எனது ஆசாரியர்களும், முதியவர்களும் இந் நகரத்தில் மரித்திருக்கின்றனர். அவர்கள் உணவுக்காக அலைந்திருக்கிறார்கள். அவர்கள் உயிரோடு வாழ விரும்பியிருக்கிறார்கள்.
RCTA கோப்: "என்னுடைய காதலர்களை நான் கூப்பிட்டேன், ஆனால் அவர்கள் என்னை ஏய்த்தார்கள்; உயிரைக் காத்துக் கொள்ள உணவைத் தேடி நகரத்தினுள் போயிருக்கும் போதே என்னுடைய அர்ச்சகர்கள், முதியோர்கள் ஆகியோர் அங்கேயே மாய்ந்து போயினர்.
ECTA என் காதலர்களை அழைத்தேன்; அவர்களோ என்னை ஏமாற்றினர்; என் குருக்களும் பெரியோரும் தங்கள் உயிரைக்; காத்திட உணவு தேடுகையில், நகரில் பசியால் மாண்டனர்.