Bible Versions
Bible Books

Nahum 1:14 (TOV) Tamil Old BSI Version

Versions

TOV   உன்னைக்குறித்துக் கர்த்தர் கட்டளைகொடுத்திருக்கிறார்; இனி உன் பேருக்கு வித்து விதைக்கப்படுவதில்லை; உன் தேவர்களின் கோவிலில் இருக்கிற வெட்டப்பட்ட விக்கிரகத்தையும், வார்க்கப்பட்ட விக்கிரகத்தையும், நான் நிர்மூலம்பண்ணுவேன்; நீ கனவீனனானபடியால் அதை உனக்குப் பிரேதக்குழியாக்குவேன்.
IRVTA   உன்னைக்குறித்துக் யெகோவா கட்டளைகொடுத்திருக்கிறார்; இனி உன் பெயரை நிலை நாட்ட வாரிசு உருவாவதில்லை; உன் தேவர்களின் கோவிலில் இருக்கிற வெட்டப்பட்டசிலையையும், வார்க்கப்பட்ட சிலையையும், நான் அழியச்செய்வேன்; நீ கனவீனனானபடியால் அதை உனக்குப் பிரேதக்குழியாக்குவேன்.
ERVTA   அசீரியாவின் அரசனே, கர்த்தர் உன்னைக் குறித்து இந்தக் கட்டளையை கொடுத்தார்: "உன் பெயரை வைத்துக்கொள்ள சந்ததியார் யாரும் உனக்கு இருக்கமாட்டார்கள். நான் உன் தெய்வங்களின் ஆலயங்களில் உள்ள செதுக்கப்பட்ட விக்கிரகங்களையும் உலோகச் சிலைகளையும் அழிப்பேன். நான் உனக்காக உனது கல்லறையைத் தயாரித்துக்கொண்டிருக்கிறேன். உனது முடிவு விரைவில் வர இருக்கிறது.
RCTA   ஆண்டவர் உன்னைப்பற்றி இட்ட தீர்ப்பு இதுவே: "உன் பெயரைத் தாங்கும் சந்ததியே இல்லாமற் போகும்; உன் தெய்வங்களின் இல்லத்திலிருந்து செதுக்கிய சிலைகளையும் வார்ப்புப் படிமங்களையும் அழிப்போம். நாமே உனக்குக் குழிவெட்டுவோம், ஏனெனில் நீ வெறுக்கத் தக்கவன்."
ECTA   ஆண்டவர் உன்னைப்பற்றி இட்ட திர்ப்பு இதுவே; "உன் பெயரைத்தாங்கும் வழிமரபே இல்லாமல் போகும்; உன் தெய்வங்களின் கோவிலில் உள்ள செதுக்கிய சிலைகளையும் வார்ப்புப் படிமங்களையும் அழிப்பேன். நானே உனக்கு அங்குப் புதை குழி வெட்டுவேன்; ஏனெனில், நீ வெறுக்கத்தக்கவன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us